← ஆங்காங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சுங்கிங் கட்டடம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
சுங்கிங் கட்டடம் என்றால் என்ன?
சுங்கிங் மென்சன் கட்டடம் (Chungking Mansions) ஹொங்கொங்கில் கவுலூண் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் சிம் சா சுயி எனும் இடத்தில், 36-44 நாதன் வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும்.
சுங்கிங் கட்டடம் எங்கே உள்ளது?
ஆங்காங்; ஆயத்தொலைவு 22.2964, 114.1725.
இதன் கதை
சுங்கிங் மென்சன் கட்டடம் (Chungking Mansions) ஹொங்கொங்கில் கவுலூண் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் சிம் சா சுயி எனும் இடத்தில், 36-44 நாதன் வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும். இக்கட்டடம் ஹொங்கொங் வாழ் மக்கள் நடுவில் மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக ஹொங்கொங் வந்து செல்லும் இந்தியர், பாக்கித்தானியர், நேப்பாளிகள், வங்காளிகள், இலங்கையர் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஆப்பிரிக்க நாட்டவர்களும், மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் தேடும் ஐரோப்பியர்கள் எனவும் உலகில் பல்வேறு பகுதியினரின் மத்தியிலும் நன்கு புகழ் பெற்ற கட்டடமாகும். ஹொங்கொங்கில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரே கட்டடத் தொகுதிக்குள் உலகின் பல்வேறு நாட்டு உணவு வகைகளும், ஹொங்கொங்கிலேயே மிகவும் மலிவான தங்குமிட இல்லங்களும் இந்த கட்டிடத்திலேயே உள்ளன. இந்தக் கட்டடத்துக்குள் கிட்டத்தட்ட 80-க்கும் கூடுதலான தங்குமிட இல்லங்களும் உள்ளன, அவற்றில் ஆயிரக்கணக்கான அறைகளும் உள்ளன. இந்திய, பாக்கித்தானிய உணவகங்கள் நிறைந்து காணப்படும் கட்டடமும் இதுவே ஆகும். குறிப்பாக ஹொங்கொங்கில் தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஹொங்கொங் வருவோர் இந்த கட்டடத்தைப் பற்றி அறிந்து வைத்துக்கொள்வது பயனுள்ளதாகும். 1961 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டடம், 17 அடுக்கு மாடிகளை கொண்டுள்ளது.
ஆங்காங்: அருகிலுள்ள இடங்கள்
The Peninsula Hong Kong
150 m தொலைவில்
வான்வெளி அருங்காட்சியம்
220 m தொலைவில்
சிம் சா சுயி பள்ளிவாசல்
270 m தொலைவில்
Hong Kong Museum of Art
320 m தொலைவில்
Hong Kong Cultural Centre
360 m தொலைவில்
சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்
440 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.