Landmark Wiki

← பொக்காரா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

டேவிஸ் அருவி

பிற மொழிகள்: English

டேவிஸ் அருவி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

டேவிஸ் அருவி என்றால் என்ன?

டேவிஸ் அருவி நேபாளி: पाताले छाँगो என்பது நேபாளத்தின், காஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு அருவியாகும்.

டேவிஸ் அருவி எங்கே உள்ளது?

பொக்காரா; ஆயத்தொலைவு 28.1900, 83.9600.

இதன் கதை

டேவிஸ் அருவி நேபாளி: पाताले छाँगो என்பது நேபாளத்தின், காஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். அருவி நீர் கீழே நெருங்கும் போது குகை போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இந்த சுரங்கப்பாதை ஏறக்குறைய 500 அடி நீளமாகவும் ,100 அடி ஆழமாகவும் அமைந்துள்ளது. 1961 ஜூலை 31 அன்று, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டேவி என்ற பெண்மணி இந்த அருவியில் நீச்சலடிக்க சென்ற போது, தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆழமான பகுதியில் மூழ்கி இறந்தார். கடுமையான முயற்சிக்குப்பின் மூன்று நாட்கள் கழித்து அவரது சடலம் கிடைத்தது. அவருடைய தந்தை அவருடைய மகளின் நினைவாக அதற்கு டேவிஸ் அருவி என பெயரிட விரும்பினார். இதனை நேபாளத்தில் பாட்டல் சாங்கோ என்று அழைப்பர். இதன் பொருள் "பாதாள உலக அருவி" என்பதாகும். சுரங்கப்பாதையிலிருந்து வெளியேறும், நீரானது "குப்தேஷ்வர் மகாதேவ்" என்னும் தரையடி குகை வழியே வழிந்தோடுகிறது. பீவா அணை ஏரிக்கு இதுவே நீராதாரமாக உள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளை இப்பகுதி ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கான நேபாளிகள் பொழுதுபோக்கவும் மகிழ்ச்சியாக அருவியைக் கண்டு களிக்கவும் வருகின்றனர். அதிர்ஷ்ட குளத்தில் கடவுளின் சிலையின் மீது நாணயங்களை வீசி தங்களின் அதிர்ஷ்டத்தைப் பார்க்கின்றனர்.

பொக்காரா: அருகிலுள்ள இடங்கள்

Phewa Hydropower Station

970 m தொலைவில்

இரத்னா மந்திர்

1.8 km தொலைவில்

பொக்காரா சாந்தி தூபி

1.9 km தொலைவில்

பன்னாட்டு மலை அருங்காட்சியகம்

2.2 km தொலைவில்

Phewa Lake

3.0 km தொலைவில்

Bhadrakali Temple

5.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.