← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தாமேக் தூபி
இந்தியாவில் உள்ள ஒரு கட்டடம்
பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
தாமேக் தூபி என்றால் என்ன?
தாமேக் தூபி (Dhamek Stupa), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்திலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள சாரநாத் எனுமிடத்தில் சௌகந்தி தூபி அருகே நிறுவப்பட்டுள்ளது.
தாமேக் தூபி எங்கே உள்ளது?
வாரணாசி; ஆயத்தொலைவு 25.3808, 83.0245.
இதன் கதை
தாமேக் தூபி (Dhamek Stupa), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்திலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள சாரநாத் எனுமிடத்தில் சௌகந்தி தூபி அருகே நிறுவப்பட்டுள்ளது. பௌத்த சமயத்திற்கு முன்னர் இறந்த இந்து சமயச் சாதுக்களை அமர்ந்த நிலையில் வைத்து சமாதிகள்கள் எழுப்பினர். கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின்னர், அவரது உடலை எரியூட்டி கிடைத்த சாம்பல் மற்றும் எலும்புகளை எட்டு பகுதிகளாகப் பிரித்து, எட்டு இடங்களில் வைத்து அதன் மேல் தூபிகள் எழுப்பினர். அவ்வெட்டு இடங்களில் சாரநாத் மற்றும் சாஞ்சி குறிப்பிடத்தக்கதாகும். தமோக் தூபி கிபி 500ல் நிறுவப்பட்டது. மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில், கிமு 249ல் கௌதம புத்தர் மற்றும் புத்தரின் சீடர்களின் நினைவாக, பிக்குகள் தங்குவதற்கும், சமயச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கும் சாரநாத், சாஞ்சி உள்ளிட்ட பல இடங்களில் புதிய தூபிகளையும், சைத்தியங்களையும், விகாரைகளையும் நிறுவினார். தமோக் தூபி அருகே அசோகரின் தூண்கள் உள்ளது. தாமேக் தூபியை ரிஷிபத்தனா என்றும் (ரிஷி வருகை புரிந்த இடம்) அழைப்பர். பல்லாண்டு தவத்திற்குப் பின்னர் புத்தகயாவில் ஞானம் அடைந்த கௌதம புத்தர், தாம் பெற்ற ஞானத்தை, தம் முதல் ஐந்து சீடர்களிடம் உரைப்பதற்கு சாரநாத்திற்கு வந்தார். தாமேக் தூபி ஆறு முறை சீரமைக்கப்பட்டாலும், அதன் உச்சிப் பகுதியில் இதுவரை எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை.
வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்
சாரநாத் அருங்காட்சியகம்
200 m தொலைவில்
சாரநாத்
320 m தொலைவில்
சௌகந்தி தூபி
750 m தொலைவில்
Malviya Bridge
6.6 km தொலைவில்
Varanasi cantonment
6.6 km தொலைவில்
ஆலம்கிர் பள்ளிவாசல்
7.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.