Landmark Wiki

← மெக்சிக்கோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

எல் காஸ்ட்டீயோ பிரமிட்

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

எல் காஸ்ட்டீயோ பிரமிட்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

எல் காஸ்ட்டீயோ பிரமிட் என்றால் என்ன?

எல் காஸ்ட்டீயோ (El Castillo) என அழைக்கப்படும் குக்குல்கான் பிரமிது (Kukulcan Pyramid) அல்லது குக்குல்கான் கோவில் (Temple of Kukulcan) என்பது மெக்சிக்கோவின் யுகட்டான் மாநிலத்தில் உள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இடை அமெரிக்கப் படிக்கட்டுப் பிரமிது ஆகும்.

எல் காஸ்ட்டீயோ பிரமிட் எங்கே உள்ளது?

மெக்சிக்கோ; ஆயத்தொலைவு 20.6829, -88.5686.

இதன் கதை

எல் காஸ்ட்டீயோ (El Castillo) என அழைக்கப்படும் குக்குல்கான் பிரமிது (Kukulcan Pyramid) அல்லது குக்குல்கான் கோவில் (Temple of Kukulcan) என்பது மெக்சிக்கோவின் யுகட்டான் மாநிலத்தில் உள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இடை அமெரிக்கப் படிக்கட்டுப் பிரமிது ஆகும். எல் காஸ்ட்டீயோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் எசுப்பானிய மொழிச் சொல்லாகும். கோவில் கட்டிடம் தொல்பொருள் ஆய்வாளர்களால் சிச்சென் இட்சா கட்டமைப்பு 5பி18 (Structure 5B18) என முறையாக நியமிக்கப்பட்டுள்ளது. கிபி 8-12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், முன்-கொலம்பியக் காலத்திற்கு முந்தைய மாயா நாகரிகத்தால் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், குக்குல்கான் என்ற கடவுளுக்கு ஒரு கோவிலாக செயல்பட்டது. குக்குல்கான் யுக்காடெக் மாயா இறகுகள் கொண்ட பாம்பு தெய்வம், ஆசுடெக்குகள் மற்றும் பிற மத்திய மெக்சிக்க கலாச்சாரங்களுக்கு தெரிந்த கிட்சால்குவாடலியுடன் நெருங்கிய தொடர்புடையது. இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அதே நோக்கத்திற்காக கட்டப்பட்ட ஒரு உட்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. கோவிலுக்கு நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் கொண்ட சதுரமான மொட்டை மாடிகள் உள்ளன. பாம்புகளின் சிற்பங்கள் வடக்குக் கைப்பிடிச் சுவர்களின் ஓரங்களில் ஓடுகின்றன.

மெக்சிக்கோ: அருகிலுள்ள இடங்கள்

Sian Kaʼan Biosphere Reserve

156.9 km தொலைவில்

Calakmul Biosphere Reserve

252.1 km தொலைவில்

கலக்முல்

314.8 km தொலைவில்

Palenque

509.9 km தொலைவில்

Temple of the Inscriptions

510.0 km தொலைவில்

Tlacotalpan

777.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.