← உதய்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பதே சாகர் ஏரி
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
பதே சாகர் ஏரி என்றால் என்ன?
பதே சாகர் ஏரி (Fateh Sagar Lake) இராசத்தான் மாநிலத்தின் உதயப்பூரில் அமைந்துள்ளது.
பதே சாகர் ஏரி எங்கே உள்ளது?
உதய்பூர்; ஆயத்தொலைவு 24.6000, 73.6700.
இதன் கதை
பதே சாகர் ஏரி (Fateh Sagar Lake) இராசத்தான் மாநிலத்தின் உதயப்பூரில் அமைந்துள்ளது. 1680 களில் பிகோலா ஏரிக்கு வடக்கே, உதய்பூரின் வடமேற்கில் கட்டப்பட்டது. மேவார் மற்றும் உதயப்பூர் மகாராணாவாக இருந்த பதே சிங்கின் பெயரிடப்பட்ட இது ஒரு செயற்கை ஏரியாகும். உதயப்பூரின் நான்கு ஏரிகளில் இதுவும் ஒன்று. பிகோலா ஏரி, உதய் சாகர் ஏரி, தேபார் ஏரி அல்லது ஜெய்சமந்த் ஏரி ஆகியவை மற்ற மூன்று ஏரிகளாகும். பதே சாகர் ஏரியின் எல்லைக்குள், மூன்று சிறிய தீவுகளும் உள்ளன; இவற்றில் மிகப் பெரியது நேரு பூங்கா (4 km2 (1.5 sq mi) பரப்பளவு); இது ஒரு முக்கியமானச் சுற்றுலாத் தலமாகும். இரண்டாம் தீவு (0.06 km2 or 15 ஏக்கர்கள் பரப்பளவு) நீருற்றுடன் கூடிய ஒரு பொதுப் பூங்காவைக் கொண்டுள்ளது. மூன்றாவது தீவில் (1.2 km2 பரப்பளவு) (1.2 கி.மீ. 2 பரப்பளவு) உதயப்பூர் சூரிய வான் ஆய்வகம் உள்ளது. நேரு பூங்காவிற்கு உள்முக மோட்டார் படகுகள் மூலம் அணுகலாம். ஏரியின் நீர் நீளமும், பசுமையான மலைகளின் பின்னணியும் 'இரண்டாவது காஷ்மீர்' என்ற பெயரை உதயப்பூருக்குப் வழங்கியுள்ளது.
உதய்பூர்: அருகிலுள்ள இடங்கள்
Udaipur Solar Observatory
660 m தொலைவில்
Ambamata Temple
1.8 km தொலைவில்
இந்திய நாட்டுப்புற கலை வாரியம்
2.1 km தொலைவில்
ஜெகதீசர் கோவில், உதய்பூர்
2.6 km தொலைவில்
ஏரி அரண்மனை
3.0 km தொலைவில்
பெருநகர அரண்மனை, உதய்பூர்
3.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.