Landmark Wiki

← எக்குவடோர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கலாபகசுத் தீவுகள்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கலாபகசுத் தீவுகள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கலாபகசுத் தீவுகள் என்றால் என்ன?

கலாபகசுத் தீவுகள் ('Galápagos Islands, Archipiélago de Colón; வேறு ஸ்பானியப் பெயர்கள்: Islas de Colónumio அல்லது Islas Galápagos) என்பன பசிபிக் கடலில் எக்குவாடோருக்கு மேற்கே 965 கி.

கலாபகசுத் தீவுகள் எங்கே உள்ளது?

எக்குவடோர்; ஆயத்தொலைவு -0.5000, -90.5000.

இதன் கதை

கலாபகசுத் தீவுகள் ('Galápagos Islands, Archipiélago de Colón; வேறு ஸ்பானியப் பெயர்கள்: Islas de Colónumio அல்லது Islas Galápagos) என்பன பசிபிக் கடலில் எக்குவாடோருக்கு மேற்கே 965 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டங்கள் ஆகும் (1°S 91°W). கிட்டத்தட்ட 30,000 பேர் வசிக்கும் இத்தீவுகள் தென் அமெரிக்காவின் எக்குவாடோர் நாட்டின் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் "புவெர்ட்டோ பாக்குவெரிசோ மோரெனோ" (Puerto Baquerizo Moreno). சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே HMS Beagle என்னும் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகளுக்காக இத்தீவுகள் பெருமை அடைந்தன. இங்கு 13 பெரிய தீவுகளும் 6 சிறிய தீவுகளும் 107 சிறிய தீவுத் திட்டுகளும் உள்ளன. இந்தத் தீவுகள் புவியியல் உயர் வெப்பப் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு எரிமலை வெடிப்பு அடிக்கடி இடம்பெறுவதுண்டு. மிகப் பழைய தீவு சுமார் 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. மிகவும் அண்மையில் 2007 இல் இடம்பெற்ற எரிமலை வெடிப்புகளினால் இசபெல்ல தீவு, பேர்டினட்டீனா தீவு ஆகியன உருவாகின.

எக்குவடோர்: அருகிலுள்ள இடங்கள்

Sangay National Park

1360.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.