← மலேசியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
முலு மலை தேசியப் பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
முலு மலை தேசியப் பூங்கா என்றால் என்ன?
முலு மலை தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Gunung Mulu; ஆங்கிலம்: Gunung Mulu National Park) என்பது மலேசியா, சரவாக், மிரி பிரிவு முலு மலை பகுதியில் அமைந்து உள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும்.
முலு மலை தேசியப் பூங்கா எங்கே உள்ளது?
மலேசியா; ஆயத்தொலைவு 4.0425, 114.8125.
இதன் கதை
முலு மலை தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Gunung Mulu; ஆங்கிலம்: Gunung Mulu National Park) என்பது மலேசியா, சரவாக், மிரி பிரிவு முலு மலை பகுதியில் அமைந்து உள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா, பூமத்திய ரேகையின் வெப்பமண்டல மழைக்காடுகளின் மலைப்பகுதி சார்ந்த குகைகளையும்; மற்றும் சுண்ணாம்புக் கரடு அமைப்புகளையும் கொண்டுள்ளது. இந்தப் பூங்கா அதன் குகைகள் மற்றும் குகைகளைச் சுற்றியுள்ள மழைக்காடுகளைப் பற்றிய ஆய்வுகளுக்கு உலக அளவில் பிரபலமானது. குறிப்பாக 1977-1978-ஆம் ஆண்டுகளில் ராயல் ஜியோகிராபிகல் சொசைட்டி (Royal Geographical Society) எனும் புவியியல் ஆய்வுக்கழகத்தின் 100-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், இங்கு 15 மாதங்கள் ஆய்வுகள் செய்ததைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதன் பின்னர் முலு குகைகள் திட்டம் எனும் பெயரில் 20-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் இங்கு நடைபெற்றுள்ளன. சரவாக்கின் இரண்டாவது உயரமான மலையான முலு மலையின் நினைவாக இந்தத் தேசிய பூங்காவிற்குப் பெயரிடப்பட்டது
மலேசியா: அருகிலுள்ள இடங்கள்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.