← சென் பீட்டர்சுபெர்கு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் என்றால் என்ன?
ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் (Hermitage Museum) என்பது, உருசியாவின், சென்.
ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
சென் பீட்டர்சுபெர்கு; ஆயத்தொலைவு 59.9406, 30.3136.
இதன் கதை
ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் (Hermitage Museum) என்பது, உருசியாவின், சென். பீட்டர்சுபர்க் நகரில் அமைந்துள்ள கலைக்கும் பண்பாட்டுக்குமான அருங்காட்சியகம் ஆகும். உலகின் மிகப் பழையனவும், பெரியனவுமான அருங்காட்சியகங்களுள் ஒன்றான இது, பேரரசி கத்தரீனால் 1764 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1852 ஆம் ஆண்டில் மக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. இங்குள்ள மொத்த அரும்பொருட் சேமிப்புக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று மில்லியன்கள் ஆகும். இவற்றுள் மிகச் சிறு பகுதியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சேமிப்புக்களுள் உலகின் மிகப்பெரிய ஓவியச் சேமிப்பும் அடங்கும். இந்த அருங்காட்சியகம் ஆறு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற கட்டிடங்கள் என்பன உள்ளடங்கிய பெரிய கட்டிடத் தொகுதியில் அடங்கியுள்ளது. அரண்மனை எம்பாங்க்மென்ட் சாலை ஓரமாக அமைந்துள்ள இக்கட்டிடத் தொகுதியுள் உருசியப் பேரரசரின் முன்னைய வதிவிடமான மாரிகால அரண்மனையும் அடங்கும். இந்த அருங்காட்சியகத்துக்கு வெளிநாடுகளிலும் கண்காட்சி மையங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் உருசிய மத்திய அரசின் சொத்து ஆகும். இங்கே உண்ணாட்டினருக்குக் குறைந்த நுழைவுக் கட்டணமும், வெளிநாட்டினருக்குப் பல மடங்கு கூடுதலான நுழைவுக் கட்டணமும் பெறப்படுகின்றது. எனினும் எல்லோரும் மாதத்தில் ஒரு நாள், அஃதாவது முதல் வியாழக்கிழமை இலவசமாகவே அனுமதிக்கப்படுகின்றனர்.
சென் பீட்டர்சுபெர்கு: அருகிலுள்ள இடங்கள்
குளிர்கால அரண்மனை
30 m தொலைவில்
Alexander Column
200 m தொலைவில்
Palace Square
200 m தொலைவில்
Palace Bridge
310 m தொலைவில்
Kunstkamera
520 m தொலைவில்
Senate Square
780 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.