Landmark Wiki

← சென் பீட்டர்சுபெர்கு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

குளிர்கால அரண்மனை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

குளிர்கால அரண்மனை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

குளிர்கால அரண்மனை என்றால் என்ன?

குளிர்கால அரண்மனை (Winter Palace, உருசியம்: Зимний дворец, ஒ.

குளிர்கால அரண்மனை எங்கே உள்ளது?

சென் பீட்டர்சுபெர்கு; ஆயத்தொலைவு 59.9404, 30.3139.

இதன் கதை

குளிர்கால அரண்மனை (Winter Palace, உருசியம்: Зимний дворец, ஒ.பெ சீம்னிய் துவரியெத்ஸ்) என்பது குளிர்கால அரண்மனை என்பது உருசியாவில் சென் பீட்டர்சுபெர்கு நகரில் உள்ள ஓர் அரண்மனையாகும். இது 1732 முதல் 1917 வரை முந்தைய பேரரசர்களான ரோமானோவ் வம்சத்தின் அதிகாரப்பூர்வ இல்லமாக செயல்பட்டது. அரண்மனையிலும் அதன் வளாகங்களில்லும் இப்போது ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் உள்ளது. இதன் தரைப் பரப்பளவு 233,345 சதுர மீட்டர் (அரண்மனை 1,886 கதவுகள், 1,945 சாளரங்கள், 1,500 அறைகள், 117 படிக்கட்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது). குளிர்கால அரண்மனையின் மொத்த பரப்பளவு 14.2 எக்டேர் ஆகும். அரண்மனை அணை, அரண்மனை சதுக்கம் ஆகியற்றிற்கு இடையில், உருசியாவின் முதலாம் பேதுரு மன்னரின் அசல் குளிர்கால அரண்மனை இருந்த இடத்திற்கு அருகில் இவ்வரண்மனை அமைந்துள்ளது. 1730களின் பிற்பகுதிக்கும் 1837க்கும் இடையில் கிட்டத்தட்ட தொடர்ச்சியாகக் கட்டப்பட்டு வந்தது, அப்போது அது தீயினால் கடுமையாக சேதமடைந்து உடனடியாக மீண்டும் கட்டப்பட்டது. சோவியத் ஓவியக் கலைகளிலும், செர்கீ ஐசன்சுடைனின் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் (உலகையே உலுக்கிய பத்து நாட்கள்) திரைப்படத்திலும் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, 1917 ஆம் ஆண்டு அரண்மனை மீதான தாக்குதல் அக்டோபர் புரட்சியின் அடையாளமாக மாறியது.

சென் பீட்டர்சுபெர்கு: அருகிலுள்ள இடங்கள்

ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்

30 m தொலைவில்

Alexander Column

170 m தொலைவில்

Palace Square

170 m தொலைவில்

Palace Bridge

330 m தொலைவில்

Kunstkamera

550 m தொலைவில்

Senate Square

780 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.