Landmark Wiki

← கோபே: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கிமேஜி கோட்டைமனை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கிமேஜி கோட்டைமனை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கிமேஜி கோட்டைமனை என்றால் என்ன?

கிமேஜி கோட்டைமனை (Himeji Castle (姫路城, Himeji-jō?

கிமேஜி கோட்டைமனை எங்கே உள்ளது?

கோபே; ஆயத்தொலைவு 34.8394, 134.6939.

இதன் கதை

கிமேஜி கோட்டைமனை (Himeji Castle (姫路城, Himeji-jō?)} என்பது சப்பானின் கிமேஜி எனுமிடத்தில் சிறு மலையின் மேல் அமைந்துள்ள சப்பானியக் கோட்டையகத் தொகுதியாகும். மேம்பட்ட பாதுகாப்புமுறைகளைக் கொண்ட பண்ணைமுறைக் கால 83 கட்டடங்களைக் கூட்டாகக் கொண்ட இக்கோட்டைமனை, முன்னோடியான சப்பானியக் கோட்டைமனைக் கட்டடக்கலையின் எஞ்சியிருக்கின்ற நேர்த்தியானதொரு எடுத்துக்காட்டாகும். இக்கோட்டைமனையின் வெளிப்புறம் பளிச்சிடும் வெண்மைநிறத்தில் பறவை பறப்பதைப் போன்ற அமைப்பை வெளிப்படுத்துவதால், இது "வெள்ளைக் கொக்குக் கோட்டைமனை" (Hakuro-jō) அல்லது "வெள்ளை நாரைக் கோட்டைமனை" (Shirasagi-jō) எனவும் அழைக்கப்படுகிறது. கிமேயாமா குன்றின் மீது 1333 காலப்பகுதியில் அகமட்சு நோரிமுரா ஒரு கோட்டையைக் கட்டினார். அக்கோட்டை பிரிக்கப்பட்டு, கிமேயாமா கோட்டைமனையாக 1346 இல் மீளக்கட்டப்பட்டது. பின்னர் இரு நூற்றாண்டுகளில் இது மாற்றப்பட்டு, கிமேஜி கோட்டைமனையாகப் புத்துருவாக்கப்பட்டது. 1581 இல் டோயோடோமி கிடேயோசியால் மீண்டும் புத்துருவாக்கப்பட்டு, மூன்று மாடிகள் இணைக்கப்பட்டன. செகிககாரா சண்டையில் உதவியதற்காக இக்கேடா டேருமாசாவிற்கு 1600 இல் டோடுகாவா இயேயாசுவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதன் பின் 1601 முதல் 1609 வரையான காலப்பகுதியில் இக்கேடாவினால் முற்றிலும் புதுப்பித்தலுக்குள்ளாகி, பெரிய கோட்டைமனைத்தொகுதியாக விரிவாக்கத்துக்குள்ளானது.

கோபே: அருகிலுள்ள இடங்கள்

Taisan-ji

37.6 km தொலைவில்

அகாசி கைக்ஜோ

38.8 km தொலைவில்

Mount Chigogabaka

41.2 km தொலைவில்

Suma Rikyu Park

43.9 km தொலைவில்

Nagata Shrine

45.4 km தொலைவில்

Kobe Municipal Arboretum

45.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.