← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஹௌரா பாலம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español
விரைவான பதில்கள்
ஹௌரா பாலம் என்றால் என்ன?
ஹௌரா பாலம் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள ஒரு சீரான தொங்கு பாலம் ஆகும்.
ஹௌரா பாலம் எங்கே உள்ளது?
கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.5851, 88.3469.
இதன் கதை
ஹௌரா பாலம் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள ஒரு சீரான தொங்கு பாலம் ஆகும். 1943-இல் தொடங்கிவைக்கப்பட்ட இந்தப் பாலத்திற்கு முதலில் புதிய ஹவுரா பாலம் என்றே பெயரிடப்பட்டது. ஏனெனில் இது ஹவுரா மற்றும் கொல்கத்தா (கல்கத்தா) நகரங்களை இணைக்கும் அதே இடத்தில் இருந்த ஒரு மிதவைப் பாலத்துக்கு மாற்றாக அமைக்கப்பட்டது. 1965-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி, முதல் இந்திய மற்றும் முதல் ஆசிய நோபல் பரிசு பெற்ற சிறந்த வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவாக இது ரவீந்திர சேது என மறுபெயரிடப்பட்டது. இது இன்றும் ஹவுரா பாலம் என்று அழைக்கப்படுகிறது. கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளத்தின் புகழ்பெற்ற சின்னமாக ஹூக்ளி ஆற்றில் உள்ள பாலங்களில் இதுவும் ஒன்றாகும். மற்றவை இரண்டாவது ஹூக்ளி பாலம் என்று அழைக்கப்படும் வித்யாசாகர் பாலம், விவேகானந்தர் பாலம் நிவேதிதா பாலம் ஆகியவையாகும். ஹவுரா பாலம் தோராயமாக 1,00,000 வாகனங்கள் மற்றும் 1,50,000-இற்கும் மேற்பட்ட நடைப்பயணிகளின் தினசரி போக்குவரத்தைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகவும் பரபரப்பான தொங்கு பாலமாகும். இது உலகின் மிகவும் பரபரப்பான தொங்கு பாலமாகும். அதன் கட்டுமானத்தின் போது மூன்றாவது நீளமான தொங்குபாலமாக இருந்த ஹவுரா பாலம் தற்போது உலகின் ஆறாவது நீளமான பாலமாக உள்ளது.
கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்
Armenian Church of the Holy Nazareth
770 m தொலைவில்
Holy Rosary Cathedral
930 m தொலைவில்
Magen David Synagogue
970 m தொலைவில்
தாகூர் மாளிகை, ஜோரசங்கோ
1.3 km தொலைவில்
எழுத்தர்களின் கட்டிடம்
1.3 km தொலைவில்
Black Hole of Calcutta
1.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.