Landmark Wiki

← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

எழுத்தர்களின் கட்டிடம்

பிற மொழிகள்: English · 中文

எழுத்தர்களின் கட்டிடம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

எழுத்தர்களின் கட்டிடம் என்றால் என்ன?

எழுத்தர்களின் கட்டிடம் (Writers' Buildings) என்பது கொல்கத்தாவின் பி.

எழுத்தர்களின் கட்டிடம் எங்கே உள்ளது?

கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.5737, 88.3496.

இதன் கதை

எழுத்தர்களின் கட்டிடம் (Writers' Buildings) என்பது கொல்கத்தாவின் பி. பி. டி. பாகில் அமைந்துள்ளதொரு கட்டிடம். இக்கட்டிடத்தில், மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலகம் செயற்பட்டு வந்தது. இக்கட்டிடத்தின் மொத்த நீளம் 150 மீட்டர். இதன் முழுநீளமும் பிபிடி பாகின் நடுவிலமைந்துள்ள லால் தீகியின் (சிவப்பு ஏரி) வடக்குக் கரையோரம் அமைந்துள்ளது. துவக்கத்தில் இக் கட்டிடம், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணிபுரிந்த இளநிலை எழுத்தர்களின் அலுவலமாக இருந்தது. 1777 ஆம் ஆண்டில் தாமசு லியான் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. தொடர்ந்துவந்த காலங்களில் பல விரிவாக்கங்கள் செய்யப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர், பிற அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோரின் அலுவலகமாக இருந்தது. அக்டோபர் 4, 2023 இல் கட்டிடத்தின் மறுசீரமைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் பெரும்பான்மையான மேற்கு வங்காள அரசுத்துறை அலுவலகங்கள் ஹவுராவிலுள்ள நபன்னா கட்டிடத்திற்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 555,000 சதுர அடிகொண்ட எழுத்தர்களின் கட்டிடமானது ஒரு குட்டி-நகரமென அழைக்கப்பட்டது. மாநிலத் தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படும் முன்னர், இக்கட்டிடத்தில் மாநில அரசின் 34 துறை அலுவலகங்கள் கிட்டத்தட்ட 6000 பணியாட்களுடன் இயங்கி வந்தன.

கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்

Black Hole of Calcutta

170 m தொலைவில்

Magen David Synagogue

500 m தொலைவில்

St. John's Church

570 m தொலைவில்

கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல்

590 m தொலைவில்

Holy Rosary Cathedral

640 m தொலைவில்

Armenian Church of the Holy Nazareth

680 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.