← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
உசேன் சாகர்
பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
உசேன் சாகர் என்றால் என்ன?
உசேன் சாகர் (ஹுசைன் சாகர், தெலுங்கு: హుస్సేన్ సాగర్, உருது: حسين ساگر), இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள ஓர் ஏரி ஆகும்.
உசேன் சாகர் எங்கே உள்ளது?
ஐதராபாது; ஆயத்தொலைவு 17.4248, 78.4733.
இதன் கதை
உசேன் சாகர் (ஹுசைன் சாகர், தெலுங்கு: హుస్సేన్ సాగర్, உருது: حسين ساگر), இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள ஓர் ஏரி ஆகும். இது நகரின் நீர்த்தேவைகளை நிறைவு செய்வதற்காக முசி ஆற்றின் கிளை ஆற்றில் கட்டிய 5.7 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள ஏரி. 1562ல் இப்ராகிம் குளி குதுப் ஷாவின் ஆட்சிக்காலத்தில் அசரத் உசேன் ஷா வாலி என்பவர் உசேன் சாகரைக் கட்டினார். இந்த ஏரியின் நடுவில் ஒரே கல்லால் ஆன கௌதம புத்தரின் சிலையை 1992-இல் அமைத்தனர். இந்த ஏரி ஐதராபாத் நகரை அதன் துணை நகரான செகந்தராபாத்திலிருந்து பிரிக்கிறது. உசேன் சாகரின் முடிவில் சயேதனி மாவின் கல்லறையான மசூதியையும் தர்காவையும் காணலாம். இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 10 அடிகளாகும். பால்காபூர் நதியின் குறுக்காக கரை எழுப்பி இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நதி முசி ஆற்றின் ஒரு துணை ஆறு ஆகும். முன்நாளில் இந்த ஏரி, செகந்திராபாத் நகருக்கு குடிநீர் வழங்குவதற்காகவே கட்டப்பட்டது. ஆனால் இன்று இவ்வேரி பொழுதுபோக்கிடமாகவும் நீர்விளையாட்டிற்காகவும் பயனாகிறது. இதன் கிழக்குப் பக்கமுள்ள ஏரிக்கரை சாலை செகந்திராபாத் நகரையும் ஐதராபாத் நகரையும் இணைக்கிறது. புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புடைய பெருமக்களின் கருங்கற் சிலைகள் சாலைநெடுகிலும் நிறுவப்பட்டுள்ளன.
ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்
ஐதராபாத்து புத்தர் சிலை
1.0 km தொலைவில்
லும்பினி பூங்கா
1.6 km தொலைவில்
பிர்லா மந்திர்
2.1 km தொலைவில்
Afzal Gunj Masjid
2.1 km தொலைவில்
எசுப்பானியப் பள்ளிவாசல்
2.1 km தொலைவில்
பிர்லா அறிவியல் அருங்காட்சியகம்
2.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.