← ஜெய்சல்மேர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஜெய்சல்மேர் கோட்டை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español
விரைவான பதில்கள்
ஜெய்சல்மேர் கோட்டை என்றால் என்ன?
ஜெய்சல்மேர் கோட்டை (Jaisalmer Fort) இந்திய மாநிலமான இராசத்தானின், ஜெய்சல்மேர் நகரத்தில் அமைந்துள்ள பெரிய மலைக்கோட்டையாகும்.
ஜெய்சல்மேர் கோட்டை எங்கே உள்ளது?
ஜெய்சல்மேர்; ஆயத்தொலைவு 26.9127, 70.9126.
இதன் கதை
ஜெய்சல்மேர் கோட்டை (Jaisalmer Fort) இந்திய மாநிலமான இராசத்தானின், ஜெய்சல்மேர் நகரத்தில் அமைந்துள்ள பெரிய மலைக்கோட்டையாகும். இராஜஸ்தானின் ஆறு மலைக் கோட்டைகளில் ஒன்றாக ஜெய்சல்மேர் மலைக்கோட்டையும் உலகப் பாரம்பரியக் களமாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது. இம்மலைக்கோட்டையை 1156-இல் இராசபுத்திர குல ஆட்சியாளர் ராவல் ஜெய்சல் என்பவரால் தார் பாலைவனத்தில் உள்ள ஜெய்சல்மேர் நகரத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள திரிகூட மலையில் கட்டப்பட்டது. பிரித்தானிய ஆட்சிக்கு முன்னர் வணிகர்கள், பயணிகள், அகதிகள் மற்றும் போர்ப்படையினர் இப்பகுதியை கடந்து செல்கையில், இக்கோட்டையில் தங்கி இளைப்பாறி விட்டுச் செல்வர். மஞ்சள் மணற்கற்களால் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் பகலில் பழுப்பு மஞ்சள் நிறத்திலும், மாலையில் தங்க நிறத்திலும் காட்சியளிக்கும். எனவே ஜெய்சல்மேர் கோட்டை சோனார் கிலா அல்லது தங்கக் கோட்டை எனப்பெயர் பெற்றது.
ஜெய்சல்மேர்: அருகிலுள்ள இடங்கள்
ஜெய்சல்மர் நாட்டுப்புற அருங்காட்சியகம்
680 m தொலைவில்
Gadisar Lake
1.1 km தொலைவில்
Jaisalmer Wind Park
1.5 km தொலைவில்
ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம், ராஜஸ்தான்
11.6 km தொலைவில்
குல்தரா
13.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.