← ஜெய்சல்மேர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
குல்தரா
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
குல்தரா என்றால் என்ன?
குல்தரா (Kuldhara), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பலைவனத்தில் உள்ள ஜெய்சல்மேர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான ஜெய்சல்மேர் நகரத்திற்கு தென்மேற்கில் 27 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த ஆளில்லா கிராமம் ஆகும்.
குல்தரா எங்கே உள்ளது?
ஜெய்சல்மேர்; ஆயத்தொலைவு 26.8700, 70.7850.
இதன் கதை
குல்தரா (Kuldhara), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பலைவனத்தில் உள்ள ஜெய்சல்மேர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான ஜெய்சல்மேர் நகரத்திற்கு தென்மேற்கில் 27 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த ஆளில்லா கிராமம் ஆகும். ஜெய்சல்மேர் இராச்சியத்தினர் காலத்தில், 13-ஆம் நூற்றாண்டில் பாலிவால் பிராமணர்களுக்காக, 410 வீடுகளும், இரண்டு தெருக்களும் கொண்ட அக்கிரகாரத்தை குல்தரா கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்டது. இக்கிராமத்தில் மழை நீர் சேரிக்க படிக்கிணறுகள் அமைக்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டில் ஜெய்சல்மேர் சமஸ்தானத்தின் திவான் சலீம் சிங்கின் இக்கிராமத்தின் மக்கள் மீதான அடாவடியான செயல்களால், இக்கிராமத்தினர் தம் வீடுகளை காலி செய்து விட்டு, இரவோடு இரவாக வெளியேறினர். அது முதல் இக்கிராமம் ஆளில்லாது, சிதிலமடைந்துள்ளது. இராஜஸ்தான் அரசின் தொல்லியல் துறை குல்தரா கிராமத்தை சீரமைத்து 2015-ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் தளமாக மாற்றியுள்ளனர்.சிதிலமடைந்த குல்தரா கிராமத்தில் 3 சுடுகாடுகளும், 13-ஆம் நூற்றாண்டின் இரண்டு நினைவுக் கற்களும் கொண்டுள்ளது.
ஜெய்சல்மேர்: அருகிலுள்ள இடங்கள்
Jaisalmer Wind Park
12.7 km தொலைவில்
ஜெய்சல்மேர் கோட்டை
13.5 km தொலைவில்
ஜெய்சல்மர் நாட்டுப்புற அருங்காட்சியகம்
14.0 km தொலைவில்
Gadisar Lake
14.2 km தொலைவில்
ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம், ராஜஸ்தான்
25.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.