← Labuan Bajo: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கொமோடோ
இந்தோனேசியாவிலுள்ள ஒரு தீவு
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கொமோடோ என்றால் என்ன?
கொமோடோ (Komodo) இந்தோனேசியாவில் உள்ள 17508 தீவுகளில் ஒன்றாகும்.
கொமோடோ எங்கே உள்ளது?
Labuan Bajo; ஆயத்தொலைவு -8.5500, 119.4500.
இதன் கதை
கொமோடோ (Komodo) இந்தோனேசியாவில் உள்ள 17508 தீவுகளில் ஒன்றாகும். சிறிய சுந்தா தீவுகளின் ஒரு பகுதியாக, சும்பவா தீவிற்குக் கிழக்கில், புளோரெஸ் தீவிற்கு மேற்கில் இத்தீவு அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 390 சதுரக் கி.மீ. பரப்பளவு கொண்ட இத்தீவில் ஏறத்தாழ 2000 மக்கள் வாழ்கின்றனர். இந்தோனேசியாவின் கொமோடோ தேசியப் பூங்காவைச் சேர்ந்த இத்தீவு, உலகில் மிகப்பெரிய பல்லி கொமோடோ டிராகனின் முதன்மையான வாழிடமாகும். இங்கு இளஞ்சிவப்பு நிறம் கொண்ட (வெள்ளை மற்றும் சிவப்பு நிற மணல் கலந்ததால் கிடைத்த நிறம்) கடற்கரை உள்ளது. இக்கடற்கரையையும் சேர்த்து உலகில் ஏழு இடங்களில் மட்டுமே இந்நிறத்தில் மணல்கொண்ட கடற்கரைகள் உள்ளன.
Labuan Bajo: அருகிலுள்ள இடங்கள்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.