← Labuan Bajo: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கொமோடோ தேசியப் பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கொமோடோ தேசியப் பூங்கா என்றால் என்ன?
கொமோடோ தேசிய பூங்கா இந்தோனேசியாவின் சுந்தா சிறு தீவுகளில் அமைந்துள்ள தேசிய பூங்கா ஆகும்.
கொமோடோ தேசியப் பூங்கா எங்கே உள்ளது?
Labuan Bajo; ஆயத்தொலைவு -8.5433, 119.4894.
இதன் கதை
கொமோடோ தேசிய பூங்கா இந்தோனேசியாவின் சுந்தா சிறு தீவுகளில் அமைந்துள்ள தேசிய பூங்கா ஆகும். இது கிழக்கு நுசா தந்கரா மாகாணமும் மேற்கு நுசா தந்கரா மாகாணமும் இதன் எல்லையில் உள்ளன. கொமோடோ, படார், ரின்கா ஆகிய பெரிய தீவுகளும் மேலும் 26 சிறு தீவுகளும் இப்பூங்காவில் அடங்கியுள்ளன. இதன் மொத்த பரப்பு 1,733 சதுர கி.மீ. ஆகும். இதில் 603 சதுர கி.மீ. நிலமாகும். கொமோடோ டிராகன்களை பாதுகாக்க இப்பூங்கா 1980ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் இது கடல் உயிரினங்கள் உட்பட மற்ற உயிரினங்களை பாதுகாக்க தொடங்கியது. 1991ஆம் ஆண்டு இப்பூங்கா யுனெசுக்கோ உலக பாரம்பரிய தளம்.ஆக அறிவிக்கப்பட்டது கொமோடோ தீவை சுற்றியுள்ள கடல் பரப்பு நிறைய கடல் வாழ் உயிரினங்கள் வாழும் பல்லுயிர் மண்டலமாக விளங்குகிறது. கொமோடோ தீவுகள் பவள முக்கோணம் பகுதியில் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் நிறைய பல்லுயிர்கள் வாழ்கின்றன.
Labuan Bajo: அருகிலுள்ள இடங்கள்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.