← இலாகூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இலாகூர் அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
இலாகூர் அருங்காட்சியகம் என்றால் என்ன?
இலாகூர் அருங்காட்சியகம் (Lahore Museum) என்பது பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.
இலாகூர் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
இலாகூர்; ஆயத்தொலைவு 31.5682, 74.3082.
இதன் கதை
இலாகூர் அருங்காட்சியகம் (Lahore Museum) என்பது பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இது 1865 ஆம் ஆண்டில் ஒரு சிறிய இடத்தில் நிறுவப்பட்டது. 1894 ஆம் ஆண்டில் பிரிட்டிசு காலனித்துவ காலத்தில் இலாகூரில் உள்ள 'தி மால்' என்ற இடத்தில் அதன் தற்போதைய இடத்தில் திறக்கப்பட்டது. இலாகூர் அருங்காட்சியகம் பாக்கித்தானின் அதிகம் பார்வையிடப்பட்ட மற்றும் புகழ்பெற்ற அருங்காட்சியகமாகும். இது தெற்காசியாவின் முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இந்த அருங்காட்சியகம், கட்டிடத்தின் முன் நேரடியாக அமைந்துள்ள ஜம்ஸாமா துப்பாக்கியுடன் அமைந்துள்ளது. இரட்யார்ட் கிப்ளிங் எழுதிய புகழ்பெற்ற கிம் என்ற பிரிட்டிசு புதினத்தில் பிரபலமானது - அவரின் தந்தை அருங்காட்சியகத்தின் ஆரம்பகால கண்காணிப்பாளர்களில் ஒருவராக இருந்தார். பண்டைய இந்தோ-கிரேக்க மற்றும் காந்தார இராச்சியங்களிலிருந்து பௌத்தக் கலைகளின் விரிவான சேகரிப்புக்காக இந்த அருங்காட்சியகம் இப்போது புகழ்பெற்றது. இது முகலாயப் பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் இந்தியாவில் உள்ள பிரித்தானியப் பேரரசு ஆகியவற்றின் சேகரிப்பையும் கொண்டுள்ளது.
இலாகூர்: அருகிலுள்ள இடங்கள்
வால்மீகி கோவில், இலாகூர்
310 m தொலைவில்
Tomb of Anarkali
730 m தொலைவில்
Sacred Heart Cathedral
920 m தொலைவில்
Lohari Gate
1.1 km தொலைவில்
தாட்டா தர்பார்
1.2 km தொலைவில்
Chauburji
1.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.