← உருசியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பைக்கால் ஏரி
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பைக்கால் ஏரி என்றால் என்ன?
பைக்கால் ஏரி (Lake Baikal) என்பது உருசியாவின் தென் சைபீரியாவில் இர்கூத்க்க் மாகாணத்தின் வடமேற்கு மற்றும் புரியாத்தியா குடியரசின் தென்கிழக்கிலுமாக இவற்றிற்கு நடுவில் உள்ள நன்னீர்ப் பேரேரி (மிகப்பெரிய ஏரி) ஆகும்.
பைக்கால் ஏரி எங்கே உள்ளது?
உருசியா; ஆயத்தொலைவு 53.5000, 108.0000.
இதன் கதை
பைக்கால் ஏரி (Lake Baikal) என்பது உருசியாவின் தென் சைபீரியாவில் இர்கூத்க்க் மாகாணத்தின் வடமேற்கு மற்றும் புரியாத்தியா குடியரசின் தென்கிழக்கிலுமாக இவற்றிற்கு நடுவில் உள்ள நன்னீர்ப் பேரேரி (மிகப்பெரிய ஏரி) ஆகும். இது உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிக ஆழமான ஏரி. இதன் ஆழம் 1,642 m (5,387 அடி), மிக அதிகளவு 23,615.39 கி.மீ. 3 (5,670 cu mi) தூய நீரும் கொண்ட ஏரி இதுவே. இது உலகில் உள்ள ஏரிகள் யாவிலும் தெளிவான, உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிகப்பழைய ஏரியும் ஆகும். இது - 25 மில்லியன் ஆண்டுகள பழமையானதாக கருதப்படுகிறது. இது பரப்பளவில் உலகின் ஏழாவது மிகப் பெரிய ஏரியாக உள்ளது. உலகில் நீர்ம வடிவில் நிலத்தின் மேற்புறத்தில் உள்ள தூய்மையான நீரில் 20% இந்த ஓர் ஏரியில் உள்ளது. உருசியாவின் நன்னீரில் 90% இவ்வேரியில் உள்ளது. இது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் 1996இல் உலக பாரம்பரியக் களம் என்று அறிவித்து பாதுகாக்கப்படுகின்றது.. பைக்கால் ஏரியில் உள்ள நீரின் அளவானது அமெரிக்காவில் உள்ள ஐந்து பேரேரிகளில் உள்ள மொத்த நீரின் அளவைக்காட்டிலும் அதிகமானது, ஆனால் அமெரிக்கப் பேரேரிகளின் ஆழம் குறைவானதால், அமெரிக்கப் பேரேரிகளை ஒப்பிடும்பொழுது பைக்கால் ஏரியின் நீர்ப்பரப்பின் அளவு குறைவு. பைக்கால் ஏரியானது 636 கிலோமீட்டர் நீளமும், அதிக அளவாக 80 கிலோ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
உருசியா: அருகிலுள்ள இடங்கள்
Lena Pillars
1441.8 km தொலைவில்
Golden Mountains of Altai
1537.3 km தொலைவில்
Putorana Plateau
1870.0 km தொலைவில்
கன்னி கோமி காடுகள்
2968.8 km தொலைவில்
Shulgan-Tash Cave
3314.2 km தொலைவில்
Kazan Kremlin
3682.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.