← ஐக்கிய இராச்சியம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஏரி மாவட்டம்
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஏரி மாவட்டம் என்றால் என்ன?
ஏரி மாவட்டம் (Lake District அல்லது The Lakes அல்லது Lakeland) வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஓர் மலைப்பாங்கான மண்டலம்.
ஏரி மாவட்டம் எங்கே உள்ளது?
ஐக்கிய இராச்சியம்; ஆயத்தொலைவு 54.5000, -3.1667.
இதன் கதை
ஏரி மாவட்டம் (Lake District அல்லது The Lakes அல்லது Lakeland) வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஓர் மலைப்பாங்கான மண்டலம். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதி இங்குள்ள ஏரிகள், காடுகள், மலைகள் (ஃபெல்கள்) ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது 19வது நூற்றாண்டின் துவக்க காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த ஏரி கவிஞர்கள் என அறியப்படும் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் போன்றோரின் கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் புகழ்பெற்றுள்ளது. இப்பகுதி தேசியப் பூங்காவாக மே 9, 1951இல் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் பீக் மாவட்டத்தை அடுத்து தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது இதுவே ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் மிகவும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தேசியப் பூங்காவாக இது உள்ளது.ஆண்டுக்கு 15.8 மில்லியன் வருகைகளும் ஆண்டுக்கு நாள் வருகையாளர்கள் 23 மில்லியனாகவும் உள்ளது. இங்கிலாந்திலேயே மிக உயர்ந்த சிகரமாகிய இசுகாஃபெல் பைக் இங்குதான் உள்ளது. இங்கிலாந்தின் மிக ஆழமான ஏரியான வெஸ்ட் வாட்டரும் மிக நீளமான ஏரியான வின்டர்மெரியும் இந்த தேசியப் பூங்காவில்தான் உள்ளது.
ஐக்கிய இராச்சியம்: அருகிலுள்ள இடங்கள்
Borders of the Roman Empire
65.7 km தொலைவில்
ஆட்ரியனின் சுவர்
80.7 km தொலைவில்
Jodrell Bank Observatory
151.4 km தொலைவில்
Castles and Town Walls of King Edward in Gwynedd
167.9 km தொலைவில்
Pontcysyllte Aqueduct
170.1 km தொலைவில்
Derwent Valley Mills
187.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.