Landmark Wiki

← ஐக்கிய இராச்சியம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஆட்ரியனின் சுவர்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஆட்ரியனின் சுவர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஆட்ரியனின் சுவர் என்றால் என்ன?

ஆட்ரியனின் சுவர் (Hadrian's Wall, ஹாட்ரியனின் சுவர்) எனப்படுவது வடக்குப் பிரித்தானியாவில் கிபி 122 இல் உரோமர்களால் கட்டப்பபட்ட ஒரு இராணுவத் தடுப்புச் சுவர் அமைப்பாகும்.

ஆட்ரியனின் சுவர் எங்கே உள்ளது?

ஐக்கிய இராச்சியம்; ஆயத்தொலைவு 55.0167, -2.2833.

இதன் கதை

ஆட்ரியனின் சுவர் (Hadrian's Wall, ஹாட்ரியனின் சுவர்) எனப்படுவது வடக்குப் பிரித்தானியாவில் கிபி 122 இல் உரோமர்களால் கட்டப்பபட்ட ஒரு இராணுவத் தடுப்புச் சுவர் அமைப்பாகும். இதை ஏட்ரியன் எனப்படும் உரோமப் பேரரசன் கட்டினான். வட பிரித்தானியாவில் பிற்காலத்தில் இதே போன்ற அந்தனி சுவர் எனப்படும் சுவரும் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் உரோமப் படைகளுக்கு எதிரான தாக்குதலைத் தடுக்கப் பயன்பட்டாலும் இச்சுவரில் உள்ள கதவுகள் மூலம் பயனிக்கும் வியாபாரிகளிடம் வரி போன்றவற்றை வசூலிக்கவும் இந்தச் சுவர் வசதியாக அமைந்துள்ளது. இந்தச் சுவரின் பெரும் பகுதி இன்றும் முன்பு இருந்தது போல உள்ளதைக் காணலாம். வட பிரித்தானியாவில் இன்று இந்தச் சுவரின் எச்சங்கள் பிரபலமாக ஒரு உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாக மாறியுள்ளது. 1987 இல் யுனெஸ்கோ நிறுவனம் இந்தச் சுவர் அமைந்த பகுதியை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. கி.பி 122 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுவரின் கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நீடித்தது. கிழக்குப் பக்கமாக ஆரம்பித்த கட்டுமானப்பணி மேற்கு நோக்கி நகர ஆரம்பித்தது. ஹேட்ரியன் சுவர் சுமார் 120 கி.மீ நீளமாக இருப்பதுடன் அகலமானது அருகில் கட்டுமானத்திற்கு பொருட்கள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து மாறுபட்டு உள்ளது.

ஐக்கிய இராச்சியம்: அருகிலுள்ள இடங்கள்

Borders of the Roman Empire

20.4 km தொலைவில்

ஏரி மாவட்டம்

80.7 km தொலைவில்

Jodrell Bank Observatory

198.0 km தொலைவில்

Derwent Valley Mills

217.5 km தொலைவில்

Pontcysyllte Aqueduct

233.5 km தொலைவில்

Castles and Town Walls of King Edward in Gwynedd

245.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.