Landmark Wiki

← கொழும்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தாமரைக் கோபுரம்

இலங்கையின் கொழும்பில் உள்ள தொலைதொடர்பு கோபுரம் மற்றும் தென் ஆசியாவில் மிக உயரமான கோபுரம்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

தாமரைக் கோபுரம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தாமரைக் கோபுரம் என்றால் என்ன?

தாமரைக் கோபுரம் (Lotus Tower, சிங்களம்: නෙළුම් කුළුණ) என்பது இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள இதன் தரைத்தள பரப்பளவு 30,600 சதுர அடிகளாகவும், மேலும் 356 மீட்டர் உயரக் கோபுரமாகவும் அமைந்துள்ளது.

தாமரைக் கோபுரம் எங்கே உள்ளது?

கொழும்பு; ஆயத்தொலைவு 6.9270, 79.8583.

இதன் கதை

தாமரைக் கோபுரம் (Lotus Tower, சிங்களம்: නෙළුම් කුළුණ) என்பது இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள இதன் தரைத்தள பரப்பளவு 30,600 சதுர அடிகளாகவும், மேலும் 356 மீட்டர் உயரக் கோபுரமாகவும் அமைந்துள்ளது. இது இலங்கையின் அடையாள குறியீடாக பிரதிபலிக்கிறது. இக்கோபுரம் தற்போது (செப்டம்பர் 2019) தெற்காசியாவில் மிகவும் உயரமான சுயமாகத் தாங்கும் அமைப்பு ஆகும். அத்துடன், ஆசியாவில் 11-வது உயரமான கோபுரமும், உலகின் 19-வது உயரமான கோபுரமும் ஆகும். இக்கோபுரம் முதலில் கொழும்பின் புறநகரான பேலியகொடையில் கட்டப்படுவதாக இருந்தது, ஆனால் பின்னர் இலங்கை அரசு கொழும்பு நகரிற்கு இடத்தை மாற்றியது. தாமரை-வடிவமுள்ள இக்கோபுரம், தொலைத்தொடர்பு, காணகம், மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் கட்டி முடிப்பதற்கான $104.3 மில்லியன் செலவை சீனாவின் எக்சிம் வங்கி கடனாகக் கொடுத்துதவியது. இக்கோபுரத்தை கொழும்பு நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இருந்து காணக்கூடியதாக உள்ளது. ஏழாண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த தாமரைக் கோபுரம் 2019 செப்டம்பர் 16 ஆம் நாள் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு: அருகிலுள்ள இடங்கள்

தபால் நூதனசாலை, கொழும்பு

110 m தொலைவில்

Beira Lake

530 m தொலைவில்

Seema Malaka

1.2 km தொலைவில்

கங்காராமய

1.2 km தொலைவில்

Jami Ul-Alfar Mosque

1.5 km தொலைவில்

விகாரமகாதேவி பூங்கா

1.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.