← கொழும்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
விகாரமகாதேவி பூங்கா
இலங்கையின் கொழும்பு நகரில் உள்ளது
பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
விகாரமகாதேவி பூங்கா என்றால் என்ன?
விகாரமகாதேவி பூங்கா (Viharamahadevi Park) என்பது இலங்கையின் கொழும்பு நகரத்தில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பூங்காவாகும்.
விகாரமகாதேவி பூங்கா எங்கே உள்ளது?
கொழும்பு; ஆயத்தொலைவு 6.9139, 79.8606.
இதன் கதை
விகாரமகாதேவி பூங்கா (Viharamahadevi Park) என்பது இலங்கையின் கொழும்பு நகரத்தில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பூங்காவாகும். முன்னதாக விக்டோரியா பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இலங்கையின் காலனித்துவ கால நகர மண்டபத்திற்கு முன்னால் கொழும்பில் உள்ள கறுவாத் தோட்டத்தில் ஒரு பொதுப் பூங்காவாக இது அமைந்துள்ளது. பிரித்தானிய காலனித்துவ நிர்வாகத்தால் இப்பூங்கா உருவாக்கப்பட்டது. முதலில் விக்டோரியா ராணியின் நினைவாக "விக்டோரியா பூங்கா" என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் 1958 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி முதல் துட்டுகமுனுவின் தாயார் ராணி விகாரமகாதேவியின் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, விக்டோரியா பூங்காவை தளமாகக் கொண்ட ஆத்திரேலிய 17 ஆவது படைப்பிரிவுடன் பிரித்தானிய இராணுவம் பூங்காவை ஆக்கிரமித்தது. போருக்குப் பிறகு பூங்கா மீட்டெடுக்கப்பட்டு 1951 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. விகாரமகாதேவி பூங்காவில் ஒரு துடுப்பாட்ட விளையாட்டரங்கம் இருந்தது. இங்கு 1927 மற்றும் 1995ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முதல் தர துடுப்பாட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இலங்கை 1927 ஆம் ஆண்டில் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், 1935 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய அணிக்கு எதிராகவும் விளையாடியது.
கொழும்பு: அருகிலுள்ள இடங்கள்
National Art Gallery, Sri Lanka
270 m தொலைவில்
கொழும்பு தேசிய அருங்காட்சியகம்
430 m தொலைவில்
தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு
460 m தொலைவில்
கங்காராமய
540 m தொலைவில்
Seema Malaka
910 m தொலைவில்
சுதந்திர சதுக்கம், கொழும்பு
1.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.