Landmark Wiki

← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மெர்லயன் பூங்கா

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மெர்லயன் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மெர்லயன் பூங்கா என்றால் என்ன?

மெர்லயன் பூங்கா (Merlion Park) சிங்கப்பூரிலுள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமும் சிங்கப்பூரின் ஒரு முக்கியமான அடையாளமும் ஆகும்.

மெர்லயன் பூங்கா எங்கே உள்ளது?

சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.2868, 103.8545.

இதன் கதை

மெர்லயன் பூங்கா (Merlion Park) சிங்கப்பூரிலுள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமும் சிங்கப்பூரின் ஒரு முக்கியமான அடையாளமும் ஆகும். சிங்கப்பூரின் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியான புல்லர்டனுக்கு அருகிலும் மத்திய வணிக மாவட்டத்திற்கு அருகிலும் இப்பூங்கா அமைந்துள்ளது. இந்த பார்க்க வேண்டிய சிங்கப்பூர் ஈர்ப்புப் பகுதி சிங்கப்பூர் வருவாய் மாவட்டத்தின் மையப் பகுதியான ராபிள்சு பிளேசு, எம்ஆர்டி நிலையத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய ஒரு குறுகிய தூரத்திலேயே உள்ளது. மெர்லயன் என்பது ஒரு சிங்கத்தின் தலையும் ஒரு மீனின் உடலும் கொண்ட ஒரு புராண உயிரினமாகும். சிலையின் தலைப்பகுதி சிங்கப்பூரின் அசல் பெயரான சிங்கப்புரா அல்லது சிங்க நகரம் என்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இது சிங்கப்பூரின் சின்னமாகவும் அந்நாட்டின் தேசிய உருவகமாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு மெர்லயன் சிலைகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. அசல் மெர்லையன் சிலையின் அமைப்பு 8.6 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது தன் வாயிலிருந்து தண்ணீரை வெளியேற்றுகிறது. இது பின்னர் ஒரு மெர்லயன் குட்டியுடன் அசல் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கக் குட்டி சிலை 2 மீட்டர் உயரம் கொண்டது.

சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

மெர்லயன்

0 m தொலைவில்

The Fullerton Hotel Singapore

180 m தொலைவில்

Cavenagh Bridge

240 m தொலைவில்

Esplanade – Theatres on the Bay

330 m தொலைவில்

Asian Civilisations Museum

360 m தொலைவில்

Victoria Theatre and Concert Hall

360 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.