← பாக்கித்தான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மொகெஞ்சதாரோ
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
மொகெஞ்சதாரோ என்றால் என்ன?
மொகெஞ்சதாரோ (Mohenjo-daro) என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று.
மொகெஞ்சதாரோ எங்கே உள்ளது?
பாக்கித்தான்; ஆயத்தொலைவு 27.3292, 68.1389.
இதன் கதை
மொகெஞ்சதாரோ (Mohenjo-daro) என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிந்துவெளியில் அமைந்திருந்த நகரங்களில் மிகவும் பெரியது எனப்படும் இந்நகரம், அக்காலத்தில் தெற்காசியாவின் முக்கியமான நகரமாகவும் விளங்கியது. கிமு 2500 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது, பண்டைய சிந்துவெளி நாகரிகத்தின் மிகப்பெரிய குடியிருப்புகளில் ஒன்றாகும். மேலும் உலகின் ஆரம்பகால முக்கிய நகரங்களில் ஒன்றான இது பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, மினோவன் நாகரிகம் மற்றும் நோர்டே சிகோ நாகரிகங்களுடன் சமகாலத்ததாகும். குறைந்தது 40,000 மக்கள் தொகையுடன், மொகெஞ்சதாரோ பல நூற்றாண்டுகளாக செழிப்பாக இருந்துள்ள. ஆனால் கிமு 1700 வாக்கில் சிந்து சமவெளி நாகரிகத்தின் பிற பெரிய நகரங்களுடன் கைவிடப்பட்டுள்ளது. இந்த இடம் 1920களில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், 1980 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரியக் களமாக நியமிக்கப்பட்ட நகரத்தின் இடத்தில் குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவில் முதன்முதலில் இவ்வாறு நியமிக்கப்பட்ட இடம் இதுவே ஆகும்.
பாக்கித்தான்: அருகிலுள்ள இடங்கள்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.