← பாக்கித்தான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தக்சசீலா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
தக்சசீலா என்றால் என்ன?
தட்சசீலம் (சமசுகிருதம்- तक्षशिला) ,(உருது - ٹیکسلا) அல்லது தக்சீலா பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் முக்கிய தொல்லியல் சார்ந்த இடமாகும்.
தக்சசீலா எங்கே உள்ளது?
பாக்கித்தான்; ஆயத்தொலைவு 33.7458, 72.7875.
இதன் கதை
தட்சசீலம் (சமசுகிருதம்- तक्षशिला) ,(உருது - ٹیکسلا) அல்லது தக்சீலா பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் முக்கிய தொல்லியல் சார்ந்த இடமாகும். தக்சீலா இசுலாமாபாத் தலைநகரப் பகுதி மற்றும் ராவல்பிண்டியின் வடமேற்கே 32 km (20 mi) தொலைவில் பெரும் தலைநெடுஞ்சாலையினை அடுத்து உள்ளது. தக்சீலா கடல் மட்டத்திலிருந்து 549 மீட்டர்கள் (1,801 அடி) உயரத்தில் உள்ளது. இதனருகில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட ஜௌலியன் விகாரை உள்ளது. இங்கு பௌத்தர்களின் தட்சசீலப் பல்கலைக் கழகம் இருந்தது. இது தொன்மையான காந்தார நாட்டின் தலைநகரமாக விளங்கியது. தக்சசீலா என்றழைக்கப்பட்ட நகரின் அழிவுகளை காண முடிகிறது. இந்து மற்றும் புத்த சமயத்தினருக்கு மிகவும் போற்றப்படும் நகராகும். தக்சசீலா என்ற பெயர் இராமனின் தமையன் பரதனின் மகன் தக்சனின் பெயரையொட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு உலகின் மிகத் தொன்மையான பல்கலைக்கழகம் இயங்கியதாக வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். இது கி.பி 400 வரையும் நீடித்ததாகவும் கூறப்படுகிறது. வரலாற்றில், தக்சசீலா மூன்று முதன்மை வணிக வழிகளின் சந்திப்பில் இருந்துள்ளது: 1. உத்தரபாதை, "வடக்குச் சாலை" - பின்னாளில் GT சாலையாக உருமாறிய இராசபாட்டை - காந்தார நாட்டையும் கிழக்கில் கங்கைச் சமவெளியில் அமைந்த மகத நாட்டின் பாடலிபுத்திரத்தையும் இணைத்தது. 2.
பாக்கித்தான்: அருகிலுள்ள இடங்கள்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.