← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
நாகேசுவரர் கோயில், பேகூர்
கர்நாடகத்தின் பேகூரில் அமைந்துள்ள கோயில் வளாகம்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
நாகேசுவரர் கோயில், பேகூர் என்றால் என்ன?
நாகேசுவரர் கோயில் வளாகம் (Nageshvara Temple, நாகநாதேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான பேகூரில் அமைந்துள்ள கோயிலாகும்.
நாகேசுவரர் கோயில், பேகூர் எங்கே உள்ளது?
பெங்களூர்; ஆயத்தொலைவு 12.8767, 77.6267.
இதன் கதை
நாகேசுவரர் கோயில் வளாகம் (Nageshvara Temple, நாகநாதேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான பேகூரில் அமைந்துள்ள கோயிலாகும். இந்த ஊர் ஒரு காலத்தில் வேப்பூர் என்றும், கெலேலே என்றும் அழைக்கபட்டது கல்வெட்டுகளின் வழியாக அறியப்படுகிறது (மேலைக் கங்க மன்னர் துர்வினிதனின் மொல்லஅல்லி நிவந்தக் கல்வெட்டில் கி.பி. 580-625). கோயில் வளாகத்தில் உள்ள இரண்டு சிற்றாலயங்களான நாகேசுவரர் மற்றும் நாகேசுவரசுவாமி ஆகிய கோயில்கள் மேலைக் கங்க மரபின் மன்னர்களான முதலாம் நீதிமார்கன் (இரிகங்க நீதிமார்கன், 843-870 என்றும் அழைக்கப்படுகிறார்) மற்றும் இரண்டாம் எரேயப்பா நீதிமார்கன் (இரண்டாம் இரிகங்க நீதிமார்கன் 90-7- 921 என்றும் அழைக்கப்படுகிறார்.) ஆட்சியின்போது கட்டப்பட்டன. வளாகத்தில் மீதமுள்ள கோவில்கள் பிற்காலத்தில் சோழர் ஆட்சிக்காலத்தில் கட்டபட்டவை என்று கருதப்படுகின்றன. இங்கு உள்ள கி.பி. 890 ஆண்டைய பழங்கன்னட கல்வெட்டில், " பெங்களூர் போர்" (நவீன பெங்களூர் நகரம்) குறிப்பிடபட்டுள்ளது. கோவில் வளாகத்தில் காணப்படும் இக்கல்வெட்டுச் செய்தியை கல்வெட்டாய்வாளர் ஆர். நரசிம்மச்சார் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டு "எபிகிராஃபியா கர்னாட்டிகா" (தொகுதி 10 பிற்சேர்கையில்) இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்
குளிமாவு குகைக் கோவில்
2.9 km தொலைவில்
இராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவில்
5.5 km தொலைவில்
Masjid-e-Bilal
5.7 km தொலைவில்
லால் பாக்
9.1 km தொலைவில்
தொம்மலூர் சொக்கநாதசுவாமி கோயில்
9.5 km தொலைவில்
Shivoham Shiva Temple
9.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.