← இரியோ டி செனீரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ரியோ டி ஜெனிரோ தாவரவியல் பூங்கா
பிற மொழிகள்: English · 日本語 · Español
விரைவான பதில்கள்
ரியோ டி ஜெனிரோ தாவரவியல் பூங்கா என்றால் என்ன?
இரியோ டி செனீரோ தாவரவியல் பூங்கா (Rio de Janeiro Botanical Garden) அல்லது ஜார்டிம் பொட்டானிகோ இரியோ டி செனீரோவின் "சோனோசுல்" தென் மண்டலத்தில் உள்ள ஜார்டிம் பொட்டானிக்கோ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ தாவரவியல் பூங்கா எங்கே உள்ளது?
இரியோ டி செனீரோ; ஆயத்தொலைவு -22.9675, -43.2239.
இதன் கதை
இரியோ டி செனீரோ தாவரவியல் பூங்கா (Rio de Janeiro Botanical Garden) அல்லது ஜார்டிம் பொட்டானிகோ இரியோ டி செனீரோவின் "சோனோசுல்" தென் மண்டலத்தில் உள்ள ஜார்டிம் பொட்டானிக்கோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தாவரவியல் பூங்கா, பிரேசிலிய, வெளிநாட்டு தாவரங்களின் பன்முகத் தன்மையைக் காட்டுகிறது. 54 எக்டேர் பரப்பளவில் இங்கே சுமார் 6,500 தாவரஇனங்கள் (சில அழிந்து வருபவை உட்பட) பரவிக்கிடக்கின்றன. மேலும் இங்கே பல பசுமை இல்லங்களும் உள்ளன. இந்த பூங்காவில் வரலாறு, கலை, தொல்பொருள் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னங்கள் உள்ளன. இங்குள்ள முக்கியமான ஆராய்ச்சி மையத்தில் 32,000 எண்ணிக்கைக்கும் அதிகமான தொகுதிகளுடன் தாவரவியல் நிபுணத்துவம் வாய்ந்த, அந்த நாட்டிலேயே மிக சிறந்த, நூலகம் ஒன்று உள்ளது. இது போர்ச்சுகலின் போர்த்துக்கலின் ஆறாம் யோவான் என்ற அரசரால் 1808 இல் நிறுவப்பட்டது. முதலில் மேற்கிந்திய தீபகற்பத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜாதிக்காய், மிளகு மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருள்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் 1822 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக இந்த தோட்டம் திறக்கப்பட்டது, தற்போது டிசம்பர் 25, ஜனவரி 1 தவிர, ஒவ்வொரு நாளும் பகல் நேரங்களில் திறக்கப்படுகிறது.
இரியோ டி செனீரோ: அருகிலுள்ள இடங்கள்
Parque Lage
1.4 km தொலைவில்
Corcovado
2.1 km தொலைவில்
மீட்பரான கிறிஸ்து
2.2 km தொலைவில்
Copacabana
4.4 km தொலைவில்
Fort Copacabana
4.4 km தொலைவில்
Copacabana Palace
4.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.