← பெய்சிங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கோடை அரண்மனை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கோடை அரண்மனை என்றால் என்ன?
கோடை அரண்மனை (ஆங்கிலம்: Summer Palace; எளிய சீனம்: 颐和园; மரபுவழிச் சீனம்: 頤和園; பின்யின்: Yíhéyuán), என அழைக்கப்படும் இவ்வரண்மனை, ஆசியாவின் கிழக்கு பிராந்தியமான சீனா நாட்டின் தலைநகர் பெய்ஜிங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை அரண்மனை எங்கே உள்ளது?
பெய்சிங்; ஆயத்தொலைவு 39.9975, 116.2689.
இதன் கதை
கோடை அரண்மனை (ஆங்கிலம்: Summer Palace; எளிய சீனம்: 颐和园; மரபுவழிச் சீனம்: 頤和園; பின்யின்: Yíhéyuán), என அழைக்கப்படும் இவ்வரண்மனை, ஆசியாவின் கிழக்கு பிராந்தியமான சீனா நாட்டின் தலைநகர் பெய்ஜிங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோடை மாளிகை, குன்மிங் என்னும் செயற்கை ஏரியின் மத்தியில் விசாலமான பூங்காவோடு அமைக்கப்பெற்றுள்ளது. சீனாவின் பாரம்பரியமிக்க தளமாக அறியப்பட்ட இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் பொழுதுபோக்கு பூங்காவாகவும் செயற்பாட்டில் உள்ளது. முக்கியமாக, ஆயுள் மலையும் (Longevity Hill) குன்மிங் ஏரியும் (Kunming Lake) வியாபித்திருக்கும் இப்பகுதி முக்கால்வாசி நீரால் சூழப்பட்டு, 2.9 சதுர கிலோமீட்டர் (1.1 சதுர மைல்) பரப்பளவாக கொண்டதாக உள்ளது. சுமார் 60 மீட்டர்கள் (200 அடி) உயரமான ஆயுள் மலையில், படிப்படியான வரிசையில் பல கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இயற்கை அழகோடுகூடிய மலையின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்கள், கூடாரங்கள் போன்று கூர்மையான கூரைகளுடனும், விசாலமான அரங்குகளோடும் காணக்கிடைக்கின்றன. குன்மிங் ஏரியின் மத்தியில் 2.2 சதுர கிலோமீட்டர் (540 ஏக்கர்கள்) கொண்ட மத்திய குன்மிங் ஏரி முற்றிலும் மனிதர்களால் உருவாக்கப் பட்டது. அதற்காகத் தோண்டி எடுக்கப்பட்ட மண்கற்களைக் கொண்டு நீண்டஆயுள் மலை உருவாக்கப்பட்டது.
பெய்சிங்: அருகிலுள்ள இடங்கள்
Beijing Zoo
8.5 km தொலைவில்
Central Radio & TV Tower
9.2 km தொலைவில்
Military Museum of the Chinese People's Revolution
10.8 km தொலைவில்
Capital Museum
11.8 km தொலைவில்
Church of the Saviour
12.0 km தொலைவில்
White Cloud Temple
12.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.