Landmark Wiki

← காட்மாண்டு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சுயம்புநாதர் கோயில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español

சுயம்புநாதர் கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சுயம்புநாதர் கோயில் என்றால் என்ன?

சுயம்புநாதர் கோயில் (Swayambhunath) (சமசுகிருதம்: स्वयम्भूनाथ स्तुप) நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளியில் நேபாளத் தேசியத் தலைநகரம் காத்மாண்டிற்கு மேற்கே சிறிது தொலைவில் 365 படிக்கட்டுகள் கொண்ட ஒரு சிறு மலையில் தூபியுடன் அமைந்த பண்டைய காலப் பௌத்த கோயிலாகும்.

சுயம்புநாதர் கோயில் எங்கே உள்ளது?

காட்மாண்டு; ஆயத்தொலைவு 27.7150, 85.2900.

இதன் கதை

சுயம்புநாதர் கோயில் (Swayambhunath) (சமசுகிருதம்: स्वयम्भूनाथ स्तुप) நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளியில் நேபாளத் தேசியத் தலைநகரம் காத்மாண்டிற்கு மேற்கே சிறிது தொலைவில் 365 படிக்கட்டுகள் கொண்ட ஒரு சிறு மலையில் தூபியுடன் அமைந்த பண்டைய காலப் பௌத்த கோயிலாகும். இருப்பினும் இது இந்து மற்றும் பௌத்தப் பயணிகளுக்குப் புனிதமான மலைக் கோயிலாகும். சுயம்புநாதர் வளாகம் ஒரு பௌத்த நினைவுத் தூணையும், பல கோயில்களையும் கொண்டுள்ளது. அவற்றுள் பல கிறிஸ்து பிறப்பிற்கு முன், லிச்சாவி அரச குலத்தினரால் எழுப்பப்பட்டதாகும். சுயம்புநாதர் கோயில் வளாகத்தில், புத்த விகாரம், தூண், அருங்காட்சியகம், நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சுயம்புநாதர் விகாரத்தில் அமைந்த தூணின் நாற்புறத்தில் புத்தரின் அழகிய கண்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வளாகத்தில் உணவு விடுதிகள், கடைகள், தங்கும் விடுதிகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. 365 படிக்கட்டுகள் வழியாக மலையின் உச்சியில் உள்ள பௌத்தநாத் கோயிலை அடையலாம். தெற்கில் உள்ள மலைச்சாலை வழியாகச் சிற்றுந்துகளில் கோயிலை அடையலாம். படிக்கட்டுகள் வழியாகச் செல்லும் போது முதலில் பெரிய அழகிய வஜ்ராயுதத்தைக் காணலாம். பின்னர் பெரிய வெள்ளை நிற அரைக் கோள வடிவக் கோயிலின் கூரை மற்றும் நான்கு புறத்திலும் புத்தரின் கண்கள் வரையப்பட்ட தூணைக் காணலாம்.

காட்மாண்டு: அருகிலுள்ள இடங்கள்

Natural History Museum of Nepal

220 m தொலைவில்

Kasthamandap

2.0 km தொலைவில்

காத்மாண்டு நகரச் சதுக்கம்

2.0 km தொலைவில்

அனுமான் தோக்கா

2.1 km தொலைவில்

Indra Chowk

2.2 km தொலைவில்

Asan

2.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.