← சிட்னி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சிட்னி துறைமுகப் பாலம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
சிட்னி துறைமுகப் பாலம் என்றால் என்ன?
சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும்.
சிட்னி துறைமுகப் பாலம் எங்கே உள்ளது?
சிட்னி; ஆயத்தொலைவு -33.8522, 151.2106.
இதன் கதை
சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும். இது தொடருந்து, தானுந்து, நடைபாதை மற்றும் ஈருருளி வழிகள் மூலம் சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் (CBD), வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. சிட்னி பாலமும் இதன் அருகே அமைந்திருக்கும் ஓப்பரா மாளிகையும் சிட்னிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும். இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால் இது "கோர்ட்டுக் கொழுவி" (Coathanger) என்று அழைக்கப்படுகின்றது.. 1967 ஆம் ஆண்டு வரை இதுவே சிட்னியின் மிகப்பெரும் கட்டமைப்பாக இருந்தது. கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும். அத்துடன் உருக்கினாலான மிக உயரமான பாலமும் ஆகும். இதன் அதி உயர் புள்ளி பாலத்தில் இருந்து 134 மீட்டர்கள் (429.6 அடி) ஆகும். இது உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலமாகும்.
சிட்னி: அருகிலுள்ள இடங்கள்
Luna Park Sydney
520 m தொலைவில்
சிட்னி ஒப்பேரா மாளிகை
660 m தொலைவில்
Cadmans Cottage
750 m தொலைவில்
Kirribilli House
800 m தொலைவில்
The Rocks
860 m தொலைவில்
Museum of Contemporary Art Australia
880 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.