Landmark Wiki

← சிட்னி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சிட்னி ஒப்பேரா மாளிகை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சிட்னி ஒப்பேரா மாளிகை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சிட்னி ஒப்பேரா மாளிகை என்றால் என்ன?

சிட்னி ஒப்பேரா மாளிகை (Sydney Opera House) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது.

சிட்னி ஒப்பேரா மாளிகை எங்கே உள்ளது?

சிட்னி; ஆயத்தொலைவு -33.8568, 151.2151.

இதன் கதை

சிட்னி ஒப்பேரா மாளிகை (Sydney Opera House) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 2007, ஜூன் 28 ஆம் நாள் இது ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இதற்கென நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற இதன் வடிவமைப்பு டென்மார்க்கைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான ஜோர்ன் அட்சன் என்பவரால் செய்யப்பட்டது. சிட்னி ஒப்பேரா மாளிகை 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தனித்துவம் வாய்ந்த கட்டிடங்களில் ஒன்று. இது உலகின் மிகவும் புகழ் பெற்ற நிகழ்த்து கலைகளுக்கான அரங்கங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது. 2007 ஆம் ஆண்டில், புதிய ஏழு உலக அதிசயங்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட உலகம் தழுவிய வாக்கெடுப்பில் இறுதிக் கட்டத்துக்குத் தெரிவான இருபது அதிசயங்களில் ஒன்றாகவும் இது விளங்கியது. பிரபல கட்டிடக்கலைஞரான லூயிஸ் கான் இக் கட்டிடம் பற்றிக் கூறியபோது, "இக் கட்டிடத்தில் பட்டுத் தெறிக்கும்வரை தனது ஒளி எவ்வளவு அழகானது என்று சூரியனுக்கே தெரியாது" என்றார். சிட்னி ஒப்பேரா மாளிகை, சிட்னி துறைமுகப் பாலத்துக்கு அண்மையில், சிட்னித் துறைமுகத்தில் உள்ள பென்னெலோங் முனையில் அமைக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடமும் அதம் சூழலும் ஆஸ்திரேலியாவின் மிகவும் அறியப்பட்ட அடையாளச் சின்னம் ஆகும்.

சிட்னி: அருகிலுள்ள இடங்கள்

Government House

350 m தொலைவில்

Cadmans Cottage

600 m தொலைவில்

Circular Quay

600 m தொலைவில்

The Rocks

660 m தொலைவில்

சிட்னி துறைமுகப் பாலம்

660 m தொலைவில்

Museum of Contemporary Art Australia

680 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.