Landmark Wiki

← எசுப்பானியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

டெயிட் தேசியப் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español

டெயிட் தேசியப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

டெயிட் தேசியப் பூங்கா என்றால் என்ன?

டெயிட் தேசியப் பூங்கா (எசுப்பானியம்: Parque Nacional del Teide) என்பது எசுப்பானியாவின் கேனரி தீவுகளில் அமைந்திருக்கும் தேசியப் பூங்காவாகும்.

டெயிட் தேசியப் பூங்கா எங்கே உள்ளது?

எசுப்பானியா; ஆயத்தொலைவு 28.2630, -16.6160.

இதன் கதை

டெயிட் தேசியப் பூங்கா (எசுப்பானியம்: Parque Nacional del Teide) என்பது எசுப்பானியாவின் கேனரி தீவுகளில் அமைந்திருக்கும் தேசியப் பூங்காவாகும். இது 3,718 மீட்டர் உயரம் கொண்ட டெயிட் மலையை மையப்படுத்தி அமைந்துள்ளது. இந்த மலை எசுப்பானியாவின் மிக உயர்ந்த பகுதியும், அத்திலாந்திக் தீவுகளில் கடல் மட்டத்துக்கு மேலே மிக உயர்ந்த புள்ளியும், மற்றும் உலகின் மூன்றாவது உயரமான எரிமலையும் ஆகும். இது தேசியப்பூங்காவாக 22 சனவரி 1954 பிரகடனப்பட்டதால், எசுப்பானியாவின் பழமை வாய்ந்த தேசியப் பூங்காக்களில் ஒன்றாக உள்ளது. இது எசுப்பனியாவின் மிகப்பெரிய தேசியப்பூங்காவாக உள்ளது மட்டுமல்லாது கேனரி தீவுகளின் முக்கிய பகுதியாகவும் உள்ளது. இந்தப் பூங்காவில் டெயிட் எரிமலைக்கு அடுத்ததாக என்னொரு எரிமலையான பிகோ விஜோ அமைந்துள்ளது. இது கேனரி தீவுகளின் இரண்டாவது பெரிய எரிமலையாகும். இதன் உயரம் 3,135 மீட்டர். இந்தப் பூங்கா 18,990 எக்டேர் பரப்பளவைக் கொண்டதுடன் உலகப் பாரம்பரியக் களமாக [ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் சூன் 29, 2007 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. டெயிட் தேசியப்பூங்காவே எசுப்பானியாவில் அதிகம் மக்களால் பார்வையிடப்பட்ட பூங்காவாகும். இன்சுடிடுடோ கனறியோ டி எச்டடிச்டிகா (Instituto Canario de Estadística (ISTAC)) இன் படி மொத்தமாக 2.8 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

எசுப்பானியா: அருகிலுள்ள இடங்கள்

San Cristóbal de La Laguna

38.3 km தொலைவில்

கரஜனோய் தேசியப் பூங்கா

62.8 km தொலைவில்

Risco Caído

96.7 km தொலைவில்

Doñana National Park

1355.2 km தொலைவில்

Antequera Dolmens Site

1489.5 km தொலைவில்

Historic centre of Córdoba

1533.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.