Landmark Wiki

← மாலி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

திம்பக்து

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

திம்பக்து
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

திம்பக்து என்றால் என்ன?

திம்பக்து (Timbuktu, English: ; பிரான்சியம்: Tombouctou), என்பது மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம்.

திம்பக்து எங்கே உள்ளது?

மாலி; ஆயத்தொலைவு 16.7758, -3.0094.

இதன் கதை

திம்பக்து (Timbuktu, English: ; பிரான்சியம்: Tombouctou), என்பது மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இது நைஜர் ஆற்றுக்கு வடக்கே 15 கி.மீ. தூரத்தில், சகாராவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இந்நகரின் மக்கள்தொகை 54,453 (2009) ஆகும். திம்பக்து நகரத்தின் வரலாற்று மையத்தை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. கிபி 12ம் நூற்றாண்டில் இங்கு நிரந்தரமான குடியேற்றம் ஆரம்பித்தது. உப்பு, தங்கம், தந்தம், மற்றும் அடிமைகளின் வணிகப் பாதைக்காக திம்பக்து பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாலி பேரரசுக்குள் வந்தது. 15ம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இந்நகரத்தை துவாரெக் இனத்தவர்கள் சில காலம் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் 1468 ஆம் ஆண்டில் சொங்காய் பேரரசு தம் கட்டுப்பாட்டுக்குள் இந்நகரைக் கொண்டு வந்தது. 1591 ஆம் ஆண்டில் மொரோக்கோ இராணுவம் இதனைக் கைப்பற்றியது. ஆக்கிரமிப்பாளர்கள் இங்கு ஆர்மா என்ற புதிய ஆளும் வகுப்பு ஒன்றை நிறுவினர். இப்பகுதி 1612 ஆம் ஆண்டில் மொரோக்கோவிடம் இருந்து விடுதலை பெற்றது. ஆனாலும், இப்பிராந்தியத்தின் பெருமைமிக்க பாரம்பரியம் முடிவுக்கு வந்தது. பல இனத்தவர்கள் இப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பின்னர் 1893 ஆம் ஆண்டில் பிரான்சு கைப்பற்றியது.

மாலி: அருகிலுள்ள இடங்கள்

Bandiagara Escarpment

275.1 km தொலைவில்

அஸ்கியா சமாதி

320.6 km தொலைவில்

Old Towns of Djenné

359.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.