Landmark Wiki

← இசுதான்புல்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தொப்காப்பி மாளிகை

துருக்கியில் உள்ள ஒரு அரண்மைனை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

தொப்காப்பி மாளிகை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தொப்காப்பி மாளிகை என்றால் என்ன?

தொப்காப்பி மாளிகை (துருக்கியம்: Topkapı Sarayı அல்லது உதுமானியத் துருக்கியம்: طوپقپو سرايى, Ṭopḳapu Sarāyı), அல்லது செராக்லியோ, என்பது துருக்கியின் இசுத்தான்புல்லில் உள்ள மிகப் பெரிய அருங்காட்சியகம் ஆகும்.

தொப்காப்பி மாளிகை எங்கே உள்ளது?

இசுதான்புல்; ஆயத்தொலைவு 41.0130, 28.9840.

இதன் கதை

தொப்காப்பி மாளிகை (துருக்கியம்: Topkapı Sarayı அல்லது உதுமானியத் துருக்கியம்: طوپقپو سرايى, Ṭopḳapu Sarāyı), அல்லது செராக்லியோ, என்பது துருக்கியின் இசுத்தான்புல்லில் உள்ள மிகப் பெரிய அருங்காட்சியகம் ஆகும். 15 ஆம் நூற்றாண்டில் இது ஓட்டோமான் சுல்தான்களின் முதன்மை வதிவிடமாகவும், நிர்வாகத் தலைமையிடமாகவும் இருந்தது. கொன்சுதன்தினோப்பிளை வெற்றிகொண்ட பின் ஆறு ஆண்டுகள் கழித்து வெற்றியாளன் மெகமெத்தின் ஆணைப்படி 1459 இல் கட்டுமான வேலைகள் தொடங்கின. பெயாசிட் சதுக்கத்தில் உள்ள பழைய மாளிகையில் இருந்து வேறுபடுத்துவதற்காக தொப்காப்பி மாளிகையை முன்னர் "புதிய மாளிகை" என அழைத்தனர். 19 ஆம் நூற்றாண்டில் "பீரங்கி வாயில்" எனப் பொருள்படும் "தொப்காப்பி" என்னும் இன்றைய பெயர் வழக்குக்கு வந்தது. பல நூற்றாண்டுகளாக விரிவடைந்து வந்த இந்த மாளிகைத் தொகுதி 1509 ஆம் ஆண்டின் நிலநடுக்கத்துக்குப் பின்னரும், 1665 இல் இடம்பெற்ற தீ விபத்துக்குப் பின்னரும் பெரிய அளவில் திருத்தி அமைக்கப்பட்டன. மாளிகைத் தொகுதி நான்கு பெரிய முற்றங்களையும் பல சிறிய கட்டிடங்களையும் உள்ளடக்கியிருந்தது. சுல்தான் குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் ஹாரெம் எனப்படும் அந்தப்புரத்தில் வசித்தனர். முன்னணி அரச அதிகாரிகள் அரசவைக் கட்டிடத்தில் கூட்டங்களை நடத்தினர். 17 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தொப்காப்பி படிப்படியாகத் தனது முக்கியத்துவத்தை இழந்தது.

இசுதான்புல்: அருகிலுள்ள இடங்கள்

Istanbul Archaeology Museums

260 m தொலைவில்

Hagia Irene

440 m தொலைவில்

Sublime Porte

540 m தொலைவில்

Basilica Cistern

760 m தொலைவில்

சுல்தான் அகமது பள்ளிவாசல்

1.0 km தொலைவில்

New Mosque

1.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.