← Fez: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் என்றால் என்ன?
அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் அல்லது அல்-கரவிய்யீன் (அரபி: جامعة القرويين) என்பது மொரோக்கோவின் ஃபிசு நகரில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும்.
அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் எங்கே உள்ளது?
Fez; ஆயத்தொலைவு 34.0644, -4.9733.
இதன் கதை
அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் அல்லது அல்-கரவிய்யீன் (அரபி: جامعة القرويين) என்பது மொரோக்கோவின் ஃபிசு நகரில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1947 இற் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டதாயினும் இதன் தொடக்கம் பொ.கா. 859 ஆம் ஆண்டிலாகும். அப்போது இது ஒரு மத்ரசாவாக, அதாவது பள்ளிவாசற் பள்ளிக்கூடமாக நிறுவப்பட்டது. கரவிய்யீன் மத்ரசா முஸ்லிம் உலகின் முதன்மையான ஆன்மீகக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளதுடன் இப்போதும் அவ்வாறே செயற்படுகின்றது. நடுக் காலத்தின்போது முஸ்லிம் உலகுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிற் கல்வி மற்றும் பண்பாட்டுத் தொடர்பினைப் பேணுவதில் அல்-கரவிய்யீன் மத்ரசா மிகச் சிறப்பான பங்கு வகித்துள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின்போது ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்புகளுக்காகப் பெரிதும் உதவிய வரைபடங்களை வரைந்திருந்தவரான வரைபடக் கலை வல்லுநர் முகம்மது அல்-இத்ரீசி (இ. 1166) ஃபிசு நகரிற் சில காலம் இருந்தார். அப்போது அவர் அல்-கரவிய்யீன் மத்ரசாவிற் சில காலம் பயின்றதாக அல்லது வேலை செய்ததாகக் கருதப்படுகிறது. இசுலாமிய மற்றும் யூத சமுதாயங்களைத் தம் அறிவாற் பெரிதும் கவர்ந்த பேரறிஞர்கள் பலரை இந்த மத்ரசா உருவாக்கியுள்ளது. அவர்களுள் இப்னு றுசைத் அல்-சப்தி (இ. 1321), முகம்மது இப்னு அல்-ஹஜ் அல்-அப்தரி அல்-ஃபாசி (இ.
Fez: அருகிலுள்ள இடங்கள்
Diwan Mosque
140 m தொலைவில்
R'cif Mosque
210 m தொலைவில்
பழைய ஃபெஸ் நகரம்
230 m தொலைவில்
Funduq al-Najjarin
240 m தொலைவில்
Chouara Tannery
280 m தொலைவில்
Ain al-Kheil Mosque
310 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.