Landmark Wiki

← ஆங்காங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

விக்டோரியா சிகரம்

ஆங்காங்கில் உள்ள ஒரு நகரம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

விக்டோரியா சிகரம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

விக்டோரியா சிகரம் என்றால் என்ன?

விக்டோரியா சிகரம் (Victoria Peak) என்பது ஹொங்கொங் தீவில் உள்ள ஒரு மலையாகும்.

விக்டோரியா சிகரம் எங்கே உள்ளது?

ஆங்காங்; ஆயத்தொலைவு 22.2756, 114.1439.

இதன் கதை

விக்டோரியா சிகரம் (Victoria Peak) என்பது ஹொங்கொங் தீவில் உள்ள ஒரு மலையாகும். இந்த மலையை "ஒசுடின் மலை" என்றும் அழைப்பர். உள்ளூர்வாசிகள் "பீக்" என்று அழைக்கின்றனர். இந்த மலை ஹொங்கொங் தீவின் மேற்காக அமைந்துள்ளது. இதன் உயரம் (1,811 அடிகள்) 552 மீட்டர்களாகும். இது ஹொங்கொங் தீவில் உள்ள உயரமான மலையாகும். அதேவேளை இது ஹொங்கொங்கில் உள்ள உயரமான மலையல்ல. ஹொங்கொங்கில் உள்ள உயரமான மலை டை மோ சான் மலை ஆகும். இருப்பினும் இந்த விக்டோரியா சிகரத்தில் வானொலி அலைக் கோபுரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதனைச் சூழ வசதிமிக்கவர்களின் அழகிய வசிப்பிடங்களைக் கொண்டுள்ளன. இம்மலைப் பகுதியில் உள்ள வீடுகளும் அதிக விலையானவைகள் ஆகும். அத்துடன் ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களில் முதன்மையானதும் ஆகும். இந்த விக்டோரியா சிகரத்தில் இருந்து பார்த்தால், ஹொங்கொங் மையம், வஞ்சாய், மற்றும் கவுலூன் பக்கம் உள்ள கட்டடங்கள் அனைத்தையும் காணக்கூடியதாக இருக்கும். குறிப்பாக ஹொங்கொங் வரும் சுற்றுலாப் பயணிகள் போகும் முதன்மையான இடங்களில் இந்த விக்டோரியா சிகரத்தில் கட்டப்பட்டிருக்கும் சிகரக் கோபுரமும் ஒன்றாகும்.

ஆங்காங்: அருகிலுள்ள இடங்கள்

Ohel Leah Synagogue

850 m தொலைவில்

Jamia Mosque

980 m தொலைவில்

Cathedral of the Immaculate Conception

1.1 km தொலைவில்

Central–Mid-Levels escalator

1.4 km தொலைவில்

Mandarin Oriental

1.7 km தொலைவில்

ஹொங்கொங் பூங்கா

1.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.