← வாசிங்டன், டி. சி.: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வாசிங்டன் நினைவுச் சின்னம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
வாசிங்டன் நினைவுச் சின்னம் என்றால் என்ன?
வாசிங்டன் நினைவுச் சின்னம் (Washington Monument) என்பது ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன், டி.
வாசிங்டன் நினைவுச் சின்னம் எங்கே உள்ளது?
வாசிங்டன், டி. சி.; ஆயத்தொலைவு 38.8894, -77.0353.
இதன் கதை
வாசிங்டன் நினைவுச் சின்னம் (Washington Monument) என்பது ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி.யில் அமெரிக்காவின் முதலாவது தலைவர் ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவாக அமைக்கப்பட்ட மிக உயரமான நாற்பக்கங்களைக் கொண்ட மண் நிற கோபுரமாகும். இது உலகின் மிக உயரமான கற் கட்டிடம் ஆகும். இது பளிங்கு, கருங்கல், மற்றும் மணற்கல் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. வாஷிங்டன் டிசியில் அமைந்திருக்கும் மிக உயரமான கட்டிடமான இது ரொபேர்ட் மில்ஸ் என்பவரினால் 1840களில் வடிவமைக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் 1848 இல் ஆரம்பிக்கப்பட்டு மில்ஸ் இறந்தூ 30 ஆண்டுகளின் பின்னர் 1884 இல் நிறைவடைந்தது. நிதிப் பற்றாக்குறை, மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போர் காரணமாக இதன் அமைப்பு வேலைகள் நிறைவேறுவதில் தாமதங்கள் ஏற்பட்டன. இந்நினைவுச் சின்னத்தின் அடிக்கல் 1848, ஜூலை 4 இல் நாட்டப்பட்டது. இதன் உச்சி டிசம்பர் 6, 1884 இல் வைக்கப்பட்டு, 1885, பெப்ரவரி 21 இல் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. ஆனாலும் இச்சின்னம் அதிகாரபூர்வமாக 1888, அக்டோபர் 9 இல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. இக்கட்டிட வேலைகள் முடிவடைந்த நேரத்தில் இது உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. இதற்கு முன்னர் கொலோன் தேவாலயம் மிக உயரமான கட்டிடமாக இருந்தது.
வாசிங்டன், டி. சி.: அருகிலுள்ள இடங்கள்
World War II Memorial
460 m தொலைவில்
National Museum of American History
490 m தொலைவில்
Freer Gallery of Art
690 m தொலைவில்
Arthur M. Sackler Gallery
780 m தொலைவில்
சிமித்சோனிய நிறுவனம்
810 m தொலைவில்
இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம்
840 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.