← சிகாகோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சியேர்ஸ் கோபுரம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
சியேர்ஸ் கோபுரம் என்றால் என்ன?
சியேர்ஸ் கோபுரம் (Sears Tower) சிகாகோ, இலினாயிசிலுள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும்.
சியேர்ஸ் கோபுரம் எங்கே உள்ளது?
சிகாகோ; ஆயத்தொலைவு 41.8789, -87.6358.
இதன் கதை
சியேர்ஸ் கோபுரம் (Sears Tower) சிகாகோ, இலினாயிசிலுள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். கட்டுமானப்பணிகள் 1970 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி, 1973 மே 4ல் இதன் அதியுயர் உயரத்தை அடைந்தது. இது கட்டி முடிக்கப்பட்டபோது, நியூயார்க்கிலிருந்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களை உயரத்தில் விஞ்சி உலகின் அதியுயர்ந்த கட்டிடம் என்ற பெருமை பெற்றது. இது 110 மாடிகளைக்கொண்ட 443 மீட்டர் (1454 அடி) உயரமுள்ளதாகும். இக்கட்டிடத்தின் உச்சியிலுள்ள இரண்டு தொலைக் காட்சி அண்டனாக்கள் உட்பட இந்த அமைப்பின் மொத்த உயரம் 520 மீட்டர் (1707 அடி) ஆகும். உச்சியிலுள்ள அலங்கார ஈட்டியமைப்பு உட்பட, 542 மீட்டர் உயரமான, மலேசியா, கோலாலம்பூரிலுள்ள, பெட்ரோனாஸ் கோபுரங்கள் 1997ல், உலகின் அதியுயர்ந்த கட்டிடம் என்ற பெருமையை, சியேர்ஸ் கோபுரத்திடமிருந்து தட்டிக்கொண்டது. சியேர்ஸ் கோபுரம், ஐக்கிய அமெரிக்காவின் அதியுயர்ந்த அலுவலகக் கட்டிடம் என்ற பெருமையையும், அதன் பிரதான வாயிலுக்கருகிலுள்ள நடைபாதையிலிருந்து, அண்டெனா உச்சிவரையுள்ள உயரத்துக்கான உலக சாதனையையும், இன்னும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. உலகின் அதி உயரமான கூரையைக் கொண்ட கட்டிடம் என்ற பெயரையும், அதிகூடிய உயரத்திலுள்ள மக்கள் பயன்படுத்தக்கூடிய தளம் என்ற பெயரையும், அண்மையில், சீன குடியரசில் கட்டப்பட்ட, தாய்ப்பே 101 என்ற கட்டிடத்திடம் இழந்தது.
சிகாகோ: அருகிலுள்ள இடங்கள்
Franklin Center
240 m தொலைவில்
Chicago Board of Trade Building
310 m தொலைவில்
வீட்டு காப்புறுதிக் கட்டடம்
320 m தொலைவில்
Monadnock Building
550 m தொலைவில்
Chase Tower
560 m தொலைவில்
Grant Thornton Tower
790 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.