Landmark Wiki

← Zhangjiajie: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம்

சீனாவில் கன்னாடியை தரையாக அமைக்கப்பட்ட ஒரு பாலம்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம் என்றால் என்ன?

ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம் என்பது சீனாவின், வுலிங்யுவான் பகுதியில் ஜாங்ஜியாஜீ மலைப் பகுதியில் உள்ள வான்நடைப் பாலம் ஆகும்.

ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம் எங்கே உள்ளது?

Zhangjiajie; ஆயத்தொலைவு 29.3987, 110.6982.

இதன் கதை

ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம் என்பது சீனாவின், வுலிங்யுவான் பகுதியில் ஜாங்ஜியாஜீ மலைப் பகுதியில் உள்ள வான்நடைப் பாலம் ஆகும். கண்ணாடிப் பாலமானது சுற்றுலாப்பயணிகளைக் கவருவதற்காகக் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் தரைப்பகுதியானது கண்ணாடியால் ஆனதாக, கீழே பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது திறக்கப்பட்டபோது உலகின் மிக நீண்டதும், மிகப்பெரிய கண்ணாடி பாலமுமாக இது இருந்தது. இப்பாலமானது 2016 ஆகஸ்ட் 20 அன்று பொது மக்களுக்காக திறக்கப்பட்டது. இந்த பாலமானது மொத்தம் 430 மீட்டர்கள் (1,410 அடி) நீளமும், 6 மீட்டர்கள் (20 அடி) அகலமும் கொண்டதாக, தரைமட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர்கள் (980 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இப்பாலமானது சீனாவின் நடு ஹுனான் மாகாணத்தில் சாங்ஜியாஜ் தேசிய வன பூங்காவில் உள்ள இரண்டு மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்குக்குக்கு இடையில் நீண்டுள்ளது. இந்த பாலத்தில் ஒரு நேரத்தில் 800 பேர் வரை நடந்து செல்லும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை இசுரேலிய கட்டிடக் கலைஞரான ஹய்ம் டோட்டன் வடிவமைத்துள்ளார். இந்தக் கண்ணாடிப் பாலத்தைக் கட்டுவதற்காக இதன் இருபுறங்களிலும் பிரம்மாண்டமான நான்கு ஆதரவுத் தூண்களை பொறியாளர்கள் அமைத்துள்ளனர். இந்தக் கண்ணாடிப் பாலத்தில் மொத்தம் 120 க்கும் மேற்பட்ட உறுதியான கண்ணாடிகளானது உலோகச் சட்டங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

Zhangjiajie: அருகிலுள்ள இடங்கள்

வுலிங்யுவான்

20.5 km தொலைவில்

Tianzi Mountain

22.5 km தொலைவில்

Bailong Elevator

23.5 km தொலைவில்

Zhangjiajie National Forest Park

26.1 km தொலைவில்

Huanglong Cave

35.3 km தொலைவில்

Puguang Temple

36.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.