← யோக்யகர்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா
இந்தோனேசிய அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா என்றால் என்ன?
அஃபாண்டி அருங்காட்சியகம் (Affandi Museum) இந்தோனேஷியாவில் ஜாவாவில் யோகியகார்த்தா என்னுமிடத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.
அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா எங்கே உள்ளது?
யோக்யகர்த்தா; ஆயத்தொலைவு -7.7827, 110.3963.
இதன் கதை
அஃபாண்டி அருங்காட்சியகம் (Affandi Museum) இந்தோனேஷியாவில் ஜாவாவில் யோகியகார்த்தா என்னுமிடத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். கஜா வோங் ஆற்றின் கரையின்மீது அமைந்துள்ள, சோலோ தெருவில் உள்ள ஒரு இடத்தில் ஓவியர் அஃபாண்டி தனக்காக பிரத்தியேகமாக ஒரு வீட்டை வடிவமைத்து கட்டினார். அந்த இடம் அவர் வரைந்த ஓவியங்களைக் காட்சிப்படுத்துகின்ற ஒரு அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் தனித்த தன்மையோடு கட்டப்பட்டதாகும். வாழை இலையை ஒத்தது போல அமைந்துள்ள கூரையைக் கொண்டு இந்தஅருங்காட்சியகம் உள்ளது. அருங்காட்சியகத்தில் அஃபாண்டியின் 250 ஓவியங்கள் காட்சியில் உள்ளன. அதிக காற்று ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை ஆகியன ஓவியங்களின் நிலையைக் குறித்து கவலைகளை உண்டாக்கும் அளவு உள்ளது. அஃபாண்டி அறக்கட்டளை அருங்காட்சியகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது. போதிய நிதி இல்லாமையாலும், வருவாய் இல்லாததாலும் அருங்காட்சியகத்தை நிர்வகிக்க அந்த அறக்கட்டளை சற்று சிரமப்பட்டு வருகிறது கடினம். தான் இயற்கை எய்துவதற்கு முன்பாக, அஃபாண்டி தனது சொந்த அருங்காட்சியகத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து, அவரது ஓவியங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்தார். அவர் ஒருமுறை கூறினார், "நான் எளிமையாக இறக்க விரும்புகிறேன். யாருக்கும் தேவையற்ற தொந்தரவு தர நான் விரும்பவில்லை. அப்போதுதான் நான் அமைதியாக இறைவனை சென்று சேரமுடியும்.
யோக்யகர்த்தா: அருகிலுள்ள இடங்கள்
UGM Campus Mosque
2.1 km தொலைவில்
திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
2.3 km தொலைவில்
தர்ம விராடமா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
2.3 km தொலைவில்
Gembira Loka Zoo
2.4 km தொலைவில்
Kusumanegara Heroes' Cemetery
2.6 km தொலைவில்
Tugu Yogyakarta
3.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.