← பாகன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஆனந்தா கோவில்
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஆனந்தா கோவில் என்றால் என்ன?
ஆனந்தா கோவில் மியான்மரில் உள்ள பகன்னில் அமைந்துள்ளது.
ஆனந்தா கோவில் எங்கே உள்ளது?
பாகன்; ஆயத்தொலைவு 21.1708, 94.8679.
இதன் கதை
ஆனந்தா கோவில் மியான்மரில் உள்ள பகன்னில் அமைந்துள்ளது. இது ஒரு பெளத்த மதக் கோவிலாகும். இந்தக் கோவில் கி.மு 1105 ஆம் ஆண்டுவாக்கில் பாகன் வம்சாவழியில் வந்த கியான்சித்தா என்ற அரசரால் கட்டப்பட்டது. ஏறக்கிறைய 912 ஆண்டு தொண்மையானது. பகனில் இருக்கும் நான்கு புராதன கோவில்களில் இதுவும் ஒன்றாகும். கோயிலில் பல மாடிகளை கொண்டு அமைந்திருக்கிறது. இந்த அமைப்பு ஒரு குடையின் மேல் ஒரு சிறிய அடுக்குத் தூபிவைக் ஹதி (குடை அல்லது மேல் ஆபரணத்தின் பெயர்) கொண்டிருக்கும் கோவில் அமைப்பைக் கொண்டிருக்கிறது, இதுபோன்ற குடை அமைப்பு மியான்மரில் கிட்டத்தட்ட அனைத்து அடுக்குத் தூபிக்களிலும் உள்ளது. இந்த பௌத்த ஆலயத்தில் நான்கு புத்தர் சிலைகள் நின்றவ்வாறு உள்ளது. ஒவ்வொரு புத்தரும் ஒவ்வொரு திசைகளை நோக்கிப் பார்த்தபடி வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு உள்ளனர். இந்தக் கோவில் மோன் இணத்தின் ஒரு சிறந்த கட்டிடக்கலை அதிசயமாக கருதப்படுகிறது மற்றும் இந்திய கட்டிடக்கலை பாணியையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஈர்க்கக்கூடிய கோவில் மியான்மரின் வெஸ்ட்மினிஸ்டர் அபே என்றழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் 10 வது-11 ஆம் நூற்றாண்டின் இடைபட்ட காலத்தில் உருவான பத்தொட்டியா கோயிலுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது, மேலும் அது "கற்கள் நிறைந்த அருங்காட்சியகம்" என்றும் அழைக்கப்படுகிறது.
பாகன்: அருகிலுள்ள இடங்கள்
Thatbyinnyu Temple
560 m தொலைவில்
Shwegugyi Temple
570 m தொலைவில்
நாத்லாங் கியாங் கோயில்
570 m தொலைவில்
Shwesandaw Pagoda
800 m தொலைவில்
மகாபோதிக் கோயில், புத்தகயை
810 m தொலைவில்
Tharabha Gate
820 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.