← பாகன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
நாத்லாங் கியாங் கோயில்
பர்மாவில் உள்ள இந்து கோயில்
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
நாத்லாங் கியாங் கோயில் என்றால் என்ன?
நத்லாங் கியாங் கோயில் (Nathlaung Kyaung Temple, சமக்கிருதம்: नात्ह्लैङ क्यौङ, Burmese: နတ်လှောင်ကျောင်း }}; மொ.
நாத்லாங் கியாங் கோயில் எங்கே உள்ளது?
பாகன்; ஆயத்தொலைவு 21.1690, 94.8627.
இதன் கதை
நத்லாங் கியாங் கோயில் (Nathlaung Kyaung Temple, சமக்கிருதம்: नात्ह्लैङ क्यौङ, Burmese: နတ်လှောင်ကျောင်း }}; மொ. 'shrine confining the spirits') என்பது விஷ்ணுவுக்காக கட்டபட்ட ஒரு இந்து கோயில் ஆகும். இந்தக் கோயில் பர்மாவின், பாகனின் பழைய நகர மதில் சுவர்களுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது (ஆயத்தொலைவுகள்: 21.168965° N, 94.862738° E). நாத்லாங் கியாங் கோயில் தட்பியின்யு கோயிலுக்கு மேற்கே உள்ளது, இது பாகனில் எஞ்சியிருக்கும் ஒரே இந்துக் கோயிலாகும். நாத்லாங் கியாங் கோயில் பாகனில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். இது 11 ஆம் நூற்றாண்டில், அனவ்ரதா மன்னரின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. சில வரலாற்றாசிரியர்கள் இந்த கோயில் 10 ஆம் நூற்றாண்டில், நியாங்-யு சாவ்ராஹான் (தாங்துகி என்றும் அழைக்கப்படுகின்றனர்) ஆட்சியின் போது கட்டப்பட்டதாக நம்புகின்றனர். இந்த கோயில் முதலில் 11 ஆம் நூற்றாண்டின், பர்மிய இந்துக்களுக்காக கட்டபட்டது. இதில் வணிகர்களும், மன்னரின் சேவையில் இருந்த பிராமணர்கள் உள்ளிட்டவர்கள் இருந்தனர். மூலக் கோயிலின் பல கட்டமைப்புகள் அழிந்துவிட்டன, இருப்பினும் பிரதான மண்டபம் உள்ளது. முதலில், இந்த கோயிலில் விஷ்ணுவின் அவதாரச் சிலைகள் இருந்தன; இருப்பினும், இன்று, ஏழு மட்டுமே எஞ்சியுள்ளன. செங்கல்லால் கட்டப்பட்ட கோவில், நிலநடுக்கத்தால் சேதமடைந்து, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்துவருகிறது.
பாகன்: அருகிலுள்ள இடங்கள்
Thatbyinnyu Temple
30 m தொலைவில்
Shwegugyi Temple
200 m தொலைவில்
Tharabha Gate
310 m தொலைவில்
பாகன்
480 m தொலைவில்
மகாபோதிக் கோயில், புத்தகயை
530 m தொலைவில்
ஆனந்தா கோவில்
570 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.