← சியெம் ரீப்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அங்கோர் வாட்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
அங்கோர் வாட் என்றால் என்ன?
அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்து கோயிலாக இருந்து பின்னர் பௌத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும்.
அங்கோர் வாட் எங்கே உள்ளது?
சியெம் ரீப்; ஆயத்தொலைவு 13.4125, 103.8667.
இதன் கதை
அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்து கோயிலாக இருந்து பின்னர் பௌத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது பண்டைய கெமீர் இனத்தைச் சேர்ந்த இரண்டாம் சூரியவர்மனால் (பொ.ஊ. 1113–1150) 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. "அங்கோர்" என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும். இது கெமீர் மொழிச் சொல்லாகும்.
சியெம் ரீப்: அருகிலுள்ள இடங்கள்
அங்கோர்
0 m தொலைவில்
Prasat Baksei Chamkrong
1.7 km தொலைவில்
Phnom Bakheng
1.7 km தொலைவில்
Bayon
3.3 km தொலைவில்
தா புரோம்
3.5 km தொலைவில்
அங்கோர் தோம் நகரம்
3.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.