Landmark Wiki

← சியெம் ரீப்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அங்கோர்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அங்கோர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அங்கோர் என்றால் என்ன?

அங்கோர் (Angkor) (கெமர் பேரரசின்: អង្គរ, "தலைநகரம்) என்பது கம்போடியாவில் கெமர் பேரரசு நீடித்திருந்த பகுதியைக் குறிக்கிறது.

அங்கோர் எங்கே உள்ளது?

சியெம் ரீப்; ஆயத்தொலைவு 13.4125, 103.8667.

இதன் கதை

அங்கோர் (Angkor) (கெமர் பேரரசின்: អង្គរ, "தலைநகரம்) என்பது கம்போடியாவில் கெமர் பேரரசு நீடித்திருந்த பகுதியைக் குறிக்கிறது. தோராயமாக ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இப்பேரரசு செழித்து இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மிகப்பெரிய நகரமாக விளங்கிய இந்நகரத்தில் 1010 முதல்1220 வரையிலான ஆண்டுகளில் வாழ்ந்த உலக மக்கள் தொகையில் 0.1% மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்றும் கருதப்படுகிறது. அங்கோர் என்ற சொல், "புனித நகரம்" என்ற பொருள் கொண்டுள்ள ”நகரா” என்ற சமசுகிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். கி.பி 1802 இல் அங்கோரியக் காலம் தொடங்கியுள்ளது. அப்பொழுது கெமர் இந்துமத மன்னன் இரண்டாம் செயவர்மன் தானே உலகளாவிய மன்னன் என்றும் மன்னர்களுக்கெல்லாம் தானே கடவுள் என்றும் அறிவித்து 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1351 ஆம் ஆண்டு அயூத்தியா இராச்சியம் தலையெடுக்கும் வரை ஆட்சி புரிந்துள்ளார். கெமர் கிளர்ச்சி மூண்டதைத் தொடர்ந்து அங்கோரை அயூத்தியா பேரரசு வசப்படுத்தியது. இதனால் மக்கள் லாங்வெக் நகருக்கு தெற்கே இடம்பெயர்ந்தனர்.

சியெம் ரீப்: அருகிலுள்ள இடங்கள்

அங்கோர் வாட்

0 m தொலைவில்

Prasat Baksei Chamkrong

1.7 km தொலைவில்

Phnom Bakheng

1.7 km தொலைவில்

Bayon

3.3 km தொலைவில்

தா புரோம்

3.5 km தொலைவில்

அங்கோர் தோம் நகரம்

3.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.