← மும்பை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பாம்பே ஹவுஸ்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
பாம்பே ஹவுஸ் என்றால் என்ன?
பாம்பே ஹவுஸ் (Bombay House), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் தெற்கு மும்பை நகரத்தில் 4 தளங்களுடன் கூடிய நூறு ஆண்டுகள் கண்ட பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடம் ஆகும்.
பாம்பே ஹவுஸ் எங்கே உள்ளது?
மும்பை; ஆயத்தொலைவு 18.9316, 72.8327.
இதன் கதை
பாம்பே ஹவுஸ் (Bombay House), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் தெற்கு மும்பை நகரத்தில் 4 தளங்களுடன் கூடிய நூறு ஆண்டுகள் கண்ட பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடம் ஆகும். இதனை 1924ஆம் ஆண்டில் நிறுவியவர் டாட்டா குழுமம் மற்றும் டாட்டா சன்ஸ் நிறுவனங்களின் முன்னோடியான தோரப்ஜி டாட்டா ஆவார். இக்கட்டிடத்தில் தற்போதும் டாடா குழுமத்தின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது.மேலும் இக்கட்டிடத்தில் டாட்டா குழுமத் தலைவர் மற்றும் இயக்குநர்களின் அலுவலகங்கள் செயல்படுகிறது. பாம்பே ஹவுஸ் கட்டிடத்தில் உட்புறப் பகுதிகள் பல ஆண்டுகளாக மாற்றம் இன்றி செயல்பட்டது .ஜெ. ர. தா. டாட்டா பாம்பே ஹவுஸ் கட்டிடத்தின் ஒரு மூலையில் தனது அலுவலகத்தை அமைத்துச் செயல்பட்டார். 1991ஆம் ஆண்டில் ரத்தன் டாட்டாவும் அதே அறையை தனது அலுவலகமாகக் கொண்டார். 9 பிப்ரவரி 2011 அன்று பாம்பே ஹவுஸ் கட்டிடத்தின் தரை தளத்தில் பெரும் தீ சூழ்ந்து கொண்டது.இத்தீவிபத்தில் மூன்று பேர் இறந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். டாட்டா மோட்டார்ஸ் , டாட்டா ஸ்டீல், டாட்டா கெமிக்கல்ஸ், டாட்டா பவர், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ். மற்றும் டிரெண்ட் நிறுவனம் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக டாட்ட்டா சன்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் பாம்பே ஹவுஸ் கட்டிடத்தில் செயல்படுகிறது.
மும்பை: அருகிலுள்ள இடங்கள்
ராஜபாய் கடிகார கோபுரம்
360 m தொலைவில்
The Asiatic Society of Mumbai
380 m தொலைவில்
Knesset Eliyahoo Synagogue
390 m தொலைவில்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம்
550 m தொலைவில்
Cathedral of the Holy Name
940 m தொலைவில்
Leopold Cafe
1000 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.