Landmark Wiki

← மும்பை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம்

Vastu

பிற மொழிகள்: English · Bahasa Melayu

சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம் என்றால் என்ன?

சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம் (Chhatrapati Shivaji Maharaj Vastu Sangrahalaya) மன்னர் சிவாஜி அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம் எங்கே உள்ளது?

மும்பை; ஆயத்தொலைவு 18.9267, 72.8322.

இதன் கதை

சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம் (Chhatrapati Shivaji Maharaj Vastu Sangrahalaya) மன்னர் சிவாஜி அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் மேற்கு இந்தியாவின் வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகம் என்று பெயர் சூட்டப்பட்டது, இது மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள முக்கிய அருங்காட்சியகமாகும். அந்த நேரத்தில் வேல்ஸ் இளவரசராக இருந்த ஐந்தாம் ஜார்ஜ் வருகையை நினைவுகூரும் வகையில், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் மும்பையின் முக்கிய குடிமக்களால், அரசாங்கத்தின் உதவியுடன் நிறுவப்பட்டது. இது தெற்கு மும்பையில் இந்தியாவின் நுழைவாயில் அருகே அமைந்துள்ளது. மராட்டிய பேரரசின் நிறுவனர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் பெயரால் இதற்கு 1998 ஆம் ஆண்டில் என்று மறுபெயர் சூட்டப்பட்டது. முகலாய, மராத்தா மற்றும் சமண போன்ற கட்டிடக்கலை பாணிகளின் கூறுகளை உள்ளடக்கிய இந்த கட்டிடம் இந்தோ-சரசெனிக் கட்டிடக்கலையில் அமைந்ததாகும். அருங்காட்சியக கட்டிடத்தைச் சுற்றி பனை மரங்கள் மற்றும் அருமையான மலர் படுக்கைகள் கொண்ட ஒரு தோட்டம் அமைந்துள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய இந்திய வரலாற்றினை வெளிப்படுத்துகின்ற சுமார் 50,000 காட்சிப்பொருள்கள் உள்ளன. மேலும் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கலைப்பொருட்களும் இங்கு உள்ளன. அவை முதன்மையாக கலை, தொல்லியல் மற்றும் இயற்கை வரலாறு என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மும்பை: அருகிலுள்ள இடங்கள்

Knesset Eliyahoo Synagogue

160 m தொலைவில்

Cathedral of the Holy Name

400 m தொலைவில்

ராஜபாய் கடிகார கோபுரம்

410 m தொலைவில்

Leopold Cafe

450 m தொலைவில்

தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்

530 m தொலைவில்

பாம்பே ஹவுஸ்

550 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.