Landmark Wiki

← மைசூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பிருந்தாவன் தோட்டம்

மைசூரின் பூங்கா

பிற மொழிகள்: English

பிருந்தாவன் தோட்டம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பிருந்தாவன் தோட்டம் என்றால் என்ன?

பிருந்தாவன் பூங்கா (பிருந்தாவனம் பூங்கா) (Brindavan Gardens) கர்நாடக மாநிலத்தில் கிருட்டிணராச சாகர் அணையை அடுத்துள்ளது.

பிருந்தாவன் தோட்டம் எங்கே உள்ளது?

மைசூர்; ஆயத்தொலைவு 12.4261, 76.5761.

இதன் கதை

பிருந்தாவன் பூங்கா (பிருந்தாவனம் பூங்கா) (Brindavan Gardens) கர்நாடக மாநிலத்தில் கிருட்டிணராச சாகர் அணையை அடுத்துள்ளது. இது ஒரு படிநிலை பூங்காவாகும். பூங்காவிற்கான தளப்பணி 1927ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1932 ம் ஆண்டு நிறைவு பெற்றது. கிருட்டிணராச சாகர் அணையை அழகு படுத்தும் விதமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. இது காசுமீரில் முகலாயர்கள் பாணியிலுள்ள சாலிமர் பூங்காவின் வடிவமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திட்டப்பணியை முன்னின்று செயல்படுத்தியவர் அப்போதய மைசூர் அரசின் திவான் சர் மிர்சா இசுமாயில் ஆவார். தொடக்கத்தில் இது கிருட்டிணராச சாகரா படிநிலை பூங்கா என அழைக்கப்பட்டது. தற்போது இது 60 ஏக்கருக்கும் மேல் 3 படிநிலைகளை கொண்டுள்ளது, குதிரை லாட வடிவில் முடிவடைகிறது. பிருந்தாவன் பூங்கா 4 பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மை வாசல், தெற்கு பிருந்தாவன், வடக்கு பிருந்தாவன் மற்றும் குழந்தைகள் பூங்கா. பிருந்தாவன் பூங்காவை ஒட்டி 75 ஏக்கரில் அரசு பழப்பண்ணையும் 30 ஏக்கரில் நகுவனம் என்ற தோட்டக்கலை பண்ணையும், 5 ஏக்கரில் சந்திரவனம் என்ற தோட்டக்கலை பண்ணையும் உள்ளது. இவை அனைத்தும் கர்நாடக அரசின் தோட்டக்கலைத் துறையின் கீழ் வருகிறது.

மைசூர்: அருகிலுள்ள இடங்கள்

ஜெயலட்சுமி விலாசம்

13.4 km தொலைவில்

நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம், மைசூர்

13.5 km தொலைவில்

ரயில்வே அருங்காட்சியகம், மைசூர்

14.2 km தொலைவில்

புனித பிலோமினா தேவாலயம், மைசூர்

14.7 km தொலைவில்

Oriental Research Institute Mysore

15.0 km தொலைவில்

அரண்மனை அருங்காட்சியகம், மைசூர்

15.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.