← துபாய்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பூர்ஜ் அல் அராப்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பூர்ஜ் அல் அராப் என்றால் என்ன?
பூர்ஜ் அல் அராப் என்பது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒரு ஆடம்பர விடுதி (luxury hotel).
பூர்ஜ் அல் அராப் எங்கே உள்ளது?
துபாய்; ஆயத்தொலைவு 25.1414, 55.1853.
இதன் கதை
பூர்ஜ் அல் அராப் என்பது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒரு ஆடம்பர விடுதி (luxury hotel). 321 மீட்டர் (1053 அடி) உயரமுள்ள இக் கட்டிடம், விடுதியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்ற கட்டிடங்களில் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமாகும். கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில், பாரசீக வளைகுடாவில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவொன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிக்குச் செல்வதற்கெனவே கட்டப்பட்ட பாலம் ஒன்று இத் தீவைத் தலைநிலத்துடன் இணைக்கின்றது. துபாய் நகரத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உலக அளவில் அறியப்பட்ட கட்டிடமாக இது திகழ்கின்றது. இக்கட்டிடத்தின் கட்டுமான வேலை 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடம், ஒருவகை அராபியப் பாய்க்கப்பல் ஒன்றின் பாய்மரத்தை ஒத்திருக்கும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
துபாய்: அருகிலுள்ள இடங்கள்
Jumeirah Beach Hotel
530 m தொலைவில்
அல் காசிம் கோபுரங்கள்
4.9 km தொலைவில்
பாம் ஜுமேரா
5.8 km தொலைவில்
Atlantis, The Palm
7.0 km தொலைவில்
Marina Pinnacle
7.0 km தொலைவில்
Mag 218 Tower
7.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.