← New York: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சொலமன் ஆர். குகென்கெயிம் அருங்காட்சியகம்
நியூயார்க நகரில் உள்ள அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
சொலமன் ஆர். குகென்கெயிம் அருங்காட்சியகம் என்றால் என்ன?
சொலமன் ஆர்.
சொலமன் ஆர். குகென்கெயிம் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
New York; ஆயத்தொலைவு 40.7831, -73.9589.
இதன் கதை
சொலமன் ஆர். குகென்கெயிம் அருங்காட்சியகம் (Solomon R. Guggenheim Museum) என்பது நியூயார்க் நகரத்தில் மான்கட்டனின் மேல் கிழக்குப் பக்கப் பகுதியில் உள்ள 1071 ஐந்தாம் அவெனியூவை கிழக்கு 89 ஆவது தெரு சந்திக்கும் மூலையில் அமைந்துள்ள ஒரு ஓவிய அருங்காட்சியகம் ஆகும். இது தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்ற உணர்வுப்பதிவுவாத, பின்-உணர்வுப்பதிவுவாத, தொடக்க நவீனத்துவ, சமகால ஓவியச் சேகரிப்புகளின் நிரந்தர இல்லமாகும். அத்துடன்,ஆண்டு முழுவதும் சிறப்புக் கண்காட்சிகளும் இடம்பெறுகின்றன. இது 1939 ஆம் ஆண்டில் சொலமன் ஆர். குகென்கெயிம் அறக்கொடை நிறுவனத்தால் பொருள்சாரா (non-objective) ஓவியங்களுக்கான அருங்காட்சியகமாகத் தொடங்கப்பட்டது. இல்லா வொன் ரிபே என்பவர் இதன் முதல் பணிப்பாளராகப் பொறுப்பேற்றார். நிறுவனர் சொலமன் ஆர். குகென்கெயிம் 1952 ஆம் ஆண்டில் இறந்தபின்னரே இதன் தற்போதைய பெயர் இடப்பட்டது. 1959 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் வாடகைக் கட்டிடத்தில் இருந்து தற்போதைய கட்டிடத்துக்கு இடம் மாறியது. 20 ஆம் நூற்றாண்டுக் கட்டிடக்கலையின் பெயர் பெற்ற ஆக்கமான இது கட்டிடக்கலைஞர் பிராங்க் லாயிட் ரைட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. மேல் பகுதி அகலமாகவும் கீழே ஒடுக்கமாகவும் உள்ள உருளை வடிவம் கொண்ட இக்கட்டிடம் "ஆற்றலின் கோயில்" என்னும் கருத்துருவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
New York: அருகிலுள்ள இடங்கள்
பெருநகரக் கலை அருங்காட்சியகம்
540 m தொலைவில்
மையப் பூங்கா
550 m தொலைவில்
அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
1.3 km தொலைவில்
Bethesda Terrace and Fountain
1.4 km தொலைவில்
Frick Collection
1.5 km தொலைவில்
The Dakota
1.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.